சின்னமனூர் அருகே இரு வேறு சமூகத்தினரிடையே மோதல்: காவலர்கள் உள்பட 20 பேர் காயம்!


உத்தமபாளையம்: சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் பகுதியில் இரு வேறு சமூகத்தினர் இடையே சனிக்கிழமை இரவு மோதிக் கொண்டதால் காவலர் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம், எரசக்கநாயக்கனூரில் இரு சமுதாயத்திற்கு பொதுவான இடத்தில் பராசக்தி கோயில் உள்ளது. இந்நிலையில் இந்த இடம் இரு சமூகத்தினருக்கும் சொந்தம் சொந்தமானது. ஆனால் ஒரு சமூகத்தினர் இந்த கோயிலுக்கு தங்களுக்கு மட்டும் சொந்தம் என கூறி கும்பாபிஷேக பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதன் காரணமாக கடந்த சில நாள்களாக இரு சமூகத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.இது சம்பந்தமாக சனிக்கிழமை இரு சமுதாய தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் இரு சமுதாயத்திற்கும் அந்த இடம் சொந்தம். மேலும், இரு சமுதாயமும் இணைந்து கோயிலில் திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஆனால், ஒரு சமூகத்தினர் சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி முள்வேலி அமைத்தனர்.அதை மாற்று சமூகத்தினர் அந்த முள்வேலி அகற்றியதால் இரு சமூகத்தினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டர்.
இதையும் படிக்க:தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை: திருச்செந்தூரில் 33 மி.மீ. பதிவு
இதில் பாதுகாப்புப் பணியில் இருந்த சின்னமனூர் காவலர்கள் 8 பேர் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். தற்போது அப்பதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.