பக்தி

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா

advertisement by google

ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி சோம சுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவி லில் ஐப்பசி திருக்கல்யா ண விழா கடந்த 7-ந்தேதி முகூர்த்த கால் நாட்டுத லுடன் தொடங்கியது. முன்னதாக விநாயகர் பூஜை நடந்தது. மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், திருகாப்பு கட்டுதல் மற்றும் தீபாரதனை நடைபெற்றன.2- வது நாளான நேற்று காலையில் சோமாஸ்கந்தர், சோமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாரா தனை நடந்தது. பின்னர் சோமசுந்தரி அம்பாள் தவக்கோலத்தில் பூஞ்சப்ப ரத்தில் எழுந்தருளி தபசு மண்டபத்தில் அருள் பாலித்தார்.மாலையில் சோமநாத சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு தோள் மாலை மாற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு சேர்க்கை தீபாராதனையும், கதிர் குளிப்பு அபிஷேகமும் நடந்தன. பின்னர் மங்கல வாத்தி யம் முழங்க அம்பாளுக்கு சுவாமி திருமாங்கல்யம் பூட்டுதல் நடைபெற்றது. பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர், சண்முகம் பட்டர், பிரகாஷ், விக்னேஷ், விஜய், ஓதுவார்கள் சங்கர நயினார், தெரிசை அய்யப்பன், இளைய பெருமாள் குழு வினர் செய்திருந்தனர். மண்டகப்படிதாரர்கள் அரிகிருஷ்ணன், பூபால் ராஜன், தியாகராஜன், பேராசிரியர் அசோக்குமார், தங்கபாண்டியன், பால விக்னேஸ்வரன், அபிஷேக், கீழவீடு பாஸ்கர், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்ராஜ், ஜீவா, அனந்த நாராயணன், விநாயக மூர்த்தி, சுவாமி முருகன், டாக்டர் வேல்குமார், சுப்பிர மணியன், அய்யப்பன் மற்றும் தங்கமணி, அமிர்த ராஜ், சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் சங்கரலிங்கம், நடராஜன், கற்பக விநாயகம், நடராஜ தேவார பக்த ஜன சபை செயலாளர் ராமச் சந்திரன், மோகன், சேகர், ஐகோர்ட் துரை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று காலையில் அபிஷேகம் மற்றும் பட்டின பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் பொன்னூஞ்சல் நடை பெறுகிறது. நிறைவாக தீபாவளியன்று காலை சுவாமி- அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மாலையில் பூஞ்சப்பரபவனி, பைரவர் பூஜை ஆகியவையும் நடைபெறுகின்றன.விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் மணியம் சுப்பையா செய்து வருகிறார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button