தமிழகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகருக்கு தட்டுப்பாடுயின்றி, மின்கம்பங்கள், மின் மீட்டர்கள் உள்ளிட்ட தடவாளப்பொருட்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க கோரி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கு கோவில்பட்டி தமிழ்மாநில காங்கிரஸ் நகரத்தலைவர் K.P.ராஜகோபால் கோரிக்கை மனு ✍️முழு விவரம்✍️ விண்மீன்நியூஸ்

advertisement by google

பெறுநர் மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்கள்
மின்வாரிய அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை

advertisement by google

பொருள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகருக்கு தட்டுப்பாடு யின்றி மின் மீட்டர்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க கோரி

advertisement by google

ஐயா
கோவில்பட்டி நகரம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் பெரிய நகரம் ஒவ்வொரு நாளும்வளர்ச்சியை நோக்கி செல்லக்கூடிய நிலையினால் ஏராளமான மக்கள் கோவில்பட்டியினை நோக்கி வருகின்றார்கள் இதனால் நாளுக்கு நாள் கட்டிட பணிகளும் வளர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது கட்டிடப் பணியில் செய்வதில் மிக முக்கியமாக இருப்பது மின்சாரம் இன்றைக்கு கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு புதிய மின் இணைப்பு கேட்டு அதிகமான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்தது
அவர்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியினை சிறப்பாக மின்வாரிய அலுவலகம் ஊழியர்கள் செய்து வந்தாலும் மின் இணைப்பு கொடுப்பதற்கான மின் கம்பங்கள் மீட்டர்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிய வருகிறது மேலும் கடந்த ஒரு வார காலமாக போதுமான அளவு மின் மீட்டர்கள் இருப்பில் இல்லை என்பதால் புதிய மின் இணைப்பு கொடுக்க முடியாமல் ஊழியர்கள் பரிதவித்து வருகின்ற நிலை உள்ளது இதனால் பல இடங்களில் கட்டுமான பணிகள் தேக்கமடைந்து காணப்படும் சூழல் நிலவி வருகிறது
தங்கு தடை இன்றி மின் இணைப்பு உடனுக்குடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் கோவில்பட்டி நகரில் மின் மீட்டர் தட்டுப்பாட்டால் மின் இணைப்பு கொடுப்பதில் தொடர்ந்து கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது எனவே தமிழக அரசு கருத்தில் கொண்டு மின் மீட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை எவ்வித தங்கு தடையும் இன்றி தந்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
குறிப்பாக கட்டுமான பணிகள் தேக்கத்தினால் தொழிலாளர் நிறைந்த பகுதியான இந்த பகுதியில் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தை அடைந்து வருகின்றார்கள் என்பதை தங்களை மேலான கவனத்திற்கு தெரியப்படுத்திக்கொள்கின்றேன்
இப்படிக்கு
நகல்
உயர்திரு கண்காணிப்பு பொறியாளர் அவர்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம் தூத்துக்குடி
உயர்திரு கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளர் அவர்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம் கோவில்பட்டி

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button