இந்தியா

மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்ட நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

advertisement by google

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

advertisement by google

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதில் தாமதம் நீட்டித்து வருகின்றது.

advertisement by google

இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட நிகழ்வாண்டிற்கான பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கவில்லை.

advertisement by google

இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button