இந்தியா

2023 -24 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (01:02:2023) இன்று காலை 11 மணிக்கு தாக்கல்✍️மத்திய பட்ஜெட் 2023: எந்தெந்த பொருள்களின் விலை அதிகரிக்கும்?, குறையும்?✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

?2023 -24 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் சில பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரித்தும், சில பொருள்களுக்கு வரி விதிப்பை குறைத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் எந்தெந்த பொருள்கள் விலை கூடும் அல்லது குறையும் என்பதை பார்ப்போம்.

advertisement by google

தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. அதனால் இவற்றால் செய்யப்படும் அணிகலன்கள் மற்றும் பொருள்களுக்கு விலை அதிகரிக்கும்.

advertisement by google

?புகையிலை பொருட்கள் மீதான வரி 16% வரை அதிகரிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட்டின் விலை கடுமையாக உயரும்.

advertisement by google

?சமையலறை மின்சார புகைபோக்கிக்கான இறக்குமதி வரி 7.5% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளதால், இதன் விலை கூடும்.

advertisement by google

??மின்சார சமையலறை புகைபோக்கி, தங்கம்,வெள்ளி,வைரம், செப்பு மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் பொருள்கள், ரப்பர்களால் செய்யப்பட்ட பொருள்கள் சிகரெட்டுகள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும்.

advertisement by google

??செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்க அதன் உபகரணங்களுக்கான இறக்குமதி வரியை குறைத்துள்ளது, இதனால் செல்போன்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

??ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், இறால் உணவுப் பொருட்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இறால் தீவனத்தின் விலை குறையும்.

advertisement by google

??ஆய்வகத்தில் வைரங்கள் தயாரிக்கப் பயன்படும் விதைகளுக்கான அடிப்படை சுங்க வரியை குறைத்துள்ளது.

??லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதியில் வரிவிலக்கு அப்படியே தொடர்கிறது. கேமரா லென்ஸ்கள் மற்றும் தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது இதனால் விலையேற்றம் இருக்காது,அத்துடன் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.

??செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் DSLR கேமராக்களுக்கான லென்ஸ்கள், டிவி பேனல்களின் பாகங்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள், நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால், அமில-தர ஃப்ளோர்ஸ்பார் உள்நாட்டில் வளர்க்கப்படும் இறால், வைரம் தயாரிக்க பயன்படும் விதைகள் ஆகியவற்றின் விலை குறையும்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button