தமிழகம்

தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா- ஐகோர்ட்டு நீதிபதி தாரணி பங்கேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி:தூத்துக்குடி தாமோதர நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 27-வது ஆண்டு விழா நடந்தது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதிவிழாவுக்கு தட்சணமாற நாடார் சங்க செயலாளர் டி.ராஜகுமார் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் மற்றும் தாளாளர் உமரிசங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், பள்ளி கமிட்டி உறுப்பினருமான பிரம்மசக்தி வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் எஸ்.பி.மாரியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தாரணி, தமிழக பனை மரத் தொழிலாளர் நலவாரிய தலைவரும், சமத்துவ மக்கள் கழக தலைவருமான எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு, 10, 11, 12-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பள்ளி அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் ரொக்கப்பரிசு, கேடயம் மற்றும் கோப்பைகளையும் வழங்கி பாராட்டி பேசினர்.சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்விழாவில் நீதிபதி தாரணி பேசும் போது, நம் முன்னேற்றம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மாணவர்கள் செல்போனை நல்ல விஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி கற்று கொடுக்க வேண்டும் என்று கூறினார்.பனை மரத் தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேசும் போது, பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்று கூறினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.கலந்து கொண்டவர்கள்விழாவில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க செயலாளர் முருகன், எம்.ஜெகதீசன், பாலமுரளி, தட்சணமாற நாடார் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏ.அசோகன், பி.எஸ்.கனிராஜ், எஸ்.எஸ்.எஸ். சிவசங்கர், ரகுநாதன், மாணிக்கவாசகம், எஸ்.கே.செல்லப்பாண்டி, ராகவன், கே.லிங்கசெல்வன், கல்யாணசுந்தரம், ஏ.டி.சுரேஷ், ராமசுப்பு, முன்னாள் கவுன்சிலர் கோட்டுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி துணை முதல்வர் சி.வாசுகி நன்றி கூறினார். நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியை வி.இனிகோ கர்டோசா தொகுத்து வழங்கினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button