ரசிகர்களுக்காகபாபா படம், புதிய தொழிற்நுற்பத்தில், புதுபிப்பு, நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, உலகம் முழுவதும், பாபா படத்தின் ரி-ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆண்டு தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான “பாபா” திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்த இந்த படத்தை ரஜினியே திரைக்கதை அமைத்து தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை மீண்டும் மெருகேற்றியுள்ளனர். இந்த படத்தில் ரஜினி 7 மந்திரங்களை பயன்படுத்துவார். அதில் இரண்டு மந்திரங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் மெருகேற்றப்பட்டு தற்போது படம் ரசிகர்களுக்கு பிடித்தவாறு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படத்திற்கான டிரைலரும் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் டிசம்பர் 10-ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்