இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

எய்ட்ஸ் நோயாம்,திருட்பில் ஈடுபட்ட லலீதா ஜீவல்லர்ஸ் கொள்ளையன் முருகனுக்கு

advertisement by google

advertisement by google

லலிதா ஜுவல்லரி திருட்டில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகனுக்கு எய்ட்ஸ் நோயாம்!

advertisement by google

வேனுக்குள்ளேயே திரிவாராம்.. எப்படியோ இன்று இரவுக்குள் முருகனை பிடித்து விடுவதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளர்.

advertisement by google

லலிதா ஜுவல்லரியில் கிலோ கணக்கில் நகை கொள்ளை சம்பவம் நடந்ததும், இதில், வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றே சந்தேகித்தனர்.சுவரில் இருந்த ஓட்டை, கொள்ளை போன கிலோ கணக்கு நகைகள் இவைகளை வைத்து, வடமாநிலத்தை சேர்ந்தவர்களே என்று பலமாக யூகித்தனர். ஆனால், சிசிடிவி காட்சியில் நடமாடிய 2 பேரின் செருப்பு வைத்தே, இவர்கள் நம்ம ஊர் காரர்கள்தான், வடமாநிலம் இல்லை என்பதை முடிவு செய்தனர். அதேபோல, கால்நிறமும் வடமாநிலத்தவர் போல இல்லை. இதுதான் போலீசாருக்கு கிடைத்த முதல் துப்பு! ஓட்டை போடுவதில் முருகன் கில்லாடி.. மணிஹீஸ்ட் பார்த்து லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு ஸ்கெட்ச்.. பகீர்! இதன்பிறகுதான் தனிப்படை அமைத்து கொள்ளையன் மணிகண்டன் சிக்கியது. இதற்கெல்லாம் மூலகாரணம் முருகன்தான் என்று சொல்லி, கொள்ளையடிக்கும் டெக்னிக்குகளை போலீசாரிடம் கக்கி வருகிறான். எப்பவுமே வேனில்தான் சுற்றி வருவானாம் முருகன். எப்போது பெரிய அளவு கொள்ளை நடந்தாலும், ஒவ்வொருமுறையும் தனது சொந்த ஊரான சீராத்தோப்புக்கு வந்து சொந்தக்காரர்களுக்கு தேவையான பணத்தை தந்துவிட்டு போவானாம்.முருகனுக்கு இப்போது உடம்பு சரியில்லையாம்… எய்ட்ஸ் இருக்கிறதாம்.. எப்படியும் இன்று பிடித்துவிடுவோம் என்று போலீசார் தரப்பில் உறுதி தெரிவித்துள்ளனர். முருகன் சிக்கனால்தான் மற்ற சங்கதிகள் எல்லாம் வெளியே வரும்!
??????????????????????????????????

advertisement by google

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்னும் மற்றொரு கொள்ளையன் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

advertisement by google

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த அக்., 1ல் வழக்கம்போல் வேலை நேரம் முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். பின்னர் மறுநாள் காலை 9:00 மணிக்கு ஊழியர்கள் மீண்டும் கடையை திறந்தனர். அப்போது தரை தளத்தில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நகைக் கடை மேலாளர் அரிராமன் புகார்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா மற்றும் போலீசார் கடையில் விசாரணை நடத்தினர்.இந்த கொள்ளை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திருவாரூர், மடப்புரம் பாலம் அருகில் நேற்று (அக்., 3) இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்தனர். அதற்குள் ஒருவர் தப்பி ஓடினார். பிடிப்பட்ட நபரையும், அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டியையும் சோதனையிட்டனர். அதில் 5 கிலோ தங்கம் இருந்ததும், அவை லலிதா ஜூவல்லரியின் விலை அட்டையுடன் இருந்ததும் தெரிந்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர் திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் என தெரிந்தது.தப்பியோடிய சுரேஷ் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். சுரேஷின் தாயார், சகோதரிகள் உட்பட 5 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார், நகை கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருவாரூர் அருகே, சுரேஷை போலீசார் மடக்கி பிடித்தனர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button