கல்வி

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு!!✍️தமிழக காவல் துறைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்✍️ இதில் இடம் பெற்றுள்ள சாரம்சங்கள் பல நூலகங்களிலும், இணைய வளைதளங்களிலும் எடுத்து ஒன்றாக சேர்க்கப்பட்டவையே. இதன் மூலம் நம் தமிழக காவல்துறை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்✍️முழுகட்டுரை தொகுப்பு✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு!!

advertisement by google

தமிழக காவல் துறைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். இதில் இடம் பெற்றுள்ள சாரம்சங்கள் பல நூலகங்களிலும், இணைய வளைதளங்களிலும் எடுத்து ஒன்றாக சேர்க்கப்பட்டவையே. இதன் மூலம் நம் தமிழக காவல்துறை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

advertisement by google

தமிழக காவல்துறையின் நீண்டது நெடியது. இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று.

advertisement by google

தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது. டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக காவல்துறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குற்றத் தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாது 1076 கிலோமீட்டர் கொண்ட தமிழக கடலோரப் பகுதியின் பாதுகாப்பையும் தமிழக காவல்துறை கவனித்து வருகிறது. வடக்கு மத்தி, மேற்கு, தெற்கு என தமிழக காவல்துறை 4 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் ஜஜியின் தலைமையில் இயங்கி வருகிறது. இது தவிர சென்னை, சென்னை புறநகர் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 7 மாநகரங்களும் ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் 30 காவல் மாவட்டங்கள் உள்ளன. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இவை இயங்கி வருகின்றன.

advertisement by google

சிவில் போலீஸ் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயுதப் போலீஸாரும் உள்ளனர். மாநிலத்தில் ஒரு ரயில்வே சரகம் உள்பட மொத்தம் 12 காவல் சரகங்கள் உள்ளன. ஒவ்வொரு சரகத்திலும் 2 முதல் 3 மாவட்டங்கள் உள்ளன. சில சரகங்களில் இவை கூடுதலாக இருக்கும். துமிழக காவல்துறையின் பணியை எளிமையாகவும் சிறப்பாக்கும் வகையிலும் பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு சீரிய முறையில் அவை செயல்பட்டு வருகின்றன. அவை ஆயுதப் போலீஸ் அல்லது தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் ஹோம் கார்ட் மற்றும் சிவில் பாதுகாப்பு சிவில் சப்ளைஸ் சிஐடி கடலோர பாதுகாப்புப் படை சிபிசிஐடி பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு தமிழ்நாடு கமாண்டோ படை மதுவிலக்கு தடுப்புப்பிரிவு ரயில்வே போலீஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைப்பிரிவு சிறப்பு காவல் சிஐடி தொழில்நுட்பப் பிரிவு தமிழக காவல்துறையின் வரலாறு தமிழக காவல்துறையின் வரலாறு 1659ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.

advertisement by google

அந்த சுவாரஸ்யமான தொகுப்பு இதோ உங்கள் முன் :

advertisement by google
1659 - மதராஸ்பட்டத்தின் பின்னர் மெட்ராஸ் - இப்போது சென்னை, பாதுகாப்புக்காக பெத்த நாயக் என்பவரை வெள்ளயைர் அரசு நியமித்தது. இது தான் காவல் என்கிற கட்டமைப்பின் முதல் படிக்கல் 1770ம் ஆண்டு சென்னை பாதுகாப்புக்காக பெத்த நாயக் என்பவரை வெள்ளையர் அரசு நியமித்தது. இதுதான் காவல் என்கிற கட்டமைப்பின் முதல் படிக்கல் 1770ம் ஆண்டு சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜோசியோஸ் டூப்ரே போலீஸ் வாரியத்தை அமைத்தார். இதன் மூலம் பொது அமைதி பொது சுகாதாரம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. 

பின்னர் 1771ம் ஆண்டு சந்தைகளில் பொருட்கள் முறையாக விற்கப்படுகிறதா, மோசடிகள் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஆளுநர் ஸ்டரேட்டன் கொத்வால் என்கிற கண்காணிப்பாளர்களை நியமித்தார்.

advertisement by google

1780ல் – காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) பதவி உருவாக்கப்பட்டது. மார்க்கெட்களை கண்காணித்து பொருட்களின் விலை நிலவரத்தை கட்டுப்படுத்த இந்தப் பதவி உருவாக்கப்பட்டது.

1782 – தவறுகளைத் தடுக்கவும் மோசடிகளை தடுக்கவும் சுகாதாரத்தை முறைப்படுத்தவும் முறையான காவல்துறையை உருவாக்கினார்.

1791 – கொத்வால் போலீஸ் முறை ஒழிக்கப்பட்டது. வுpயாபாரிகளிடம் இவர்கள் முறைகேடாக பணம் லஞ்சம் வாங்குவதாக புகார்களின் பேரில் இந்தப் பதவி ஒழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பாலிகர் என்ற பதவி முறை அமல்படுத்தப்பட்டது.

1806 – 3 போலீஸ் மாஜிஸ்திரேட்டுகளுடன் முதலாவது எஸ்.பியாக பதவியேற்ற தாமஸ் ஹாரிஸ் மெட்ராஸை எட்டு பகுதிகளாகப் பிரித்து காவல் பணியை தொடங்கினார்.

1829 – 1832 – மெட்ராஸ் சிட்டி அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்ட்டனின் பரிந்துரையின் பேரில் பிளாக் டவுன் மாவட்டம், திருவல்லிக்கேணி மாவட்டம், வேப்பேரி மாவட்டம், பெயின்ட் தாமஸ் மாவட்டம் (சாந்தோம்) என மெட்ராஸ் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

1834 – முதல் இந்திய போலீஸ் மாஜிஸ்திரேட்டாக பிரான்சிஸ் கெல்லியும் டி.எஸ.பி.யாக வேம்பாக்கம் ராகவாச்சாரியார் பொறுப்பேற்றனர்.

1856 – போலீஸ் சட்டம் 12 ஆக திருத்தப்பட்டது. அதன்படி மெட்ராஸ் சிட்டியின் முதல் காவல் ஆணையராக ஜே.சி.போட்லர்சன் நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து 1859 – ல் நவீன மெட்ராஸ் காவல்துறையின் தொடக்கம் இங்கு தான் ஆரம்பித்தது என குறிப்பிட்டு சொல்லலாம். அதனை தொடர்ந்து போலீஸ் சட்டம் 24 கொண்டு வரப்பட்டது.

1906ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போலீஸ் ஆணையத்திற்கு இதுதான் முன்னோடியாகும்.

1865 ல் போலீஸ் (டிஜிபி) தலைமையிடம் அமைந்துள்ள கட்டிடம் மாதம் 90 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது.

1874 – இந்த கட்டத்தை மெட்ராஸ் மாகாண காவல்துறை ரூ.20 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியது. மேலும் ரூ.10 ஆயிரம் செலவழித்து பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

1884 – மலப்புரம் பகுதியில் (கேரளா) மாப்பிள்ளை என்று சொல்லப்படும் வகுப்பினரால் அடிக்கடி கலவரம் ஏற்பட்டதைத் தொடர்;ந்து அங்கு மலப்புரம் சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டது.

1895 – ல் கை விரல் ரேகைப்பிரிவு தொடங்கப்பட்டது.

1902 – மெட்ராஸ் நகரம் 2 சரகங்களாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு சரகம் துணை ஆணையரின் தலைமையிலும் தென் சரகம் ஆணையரின் நேரடிக் கண்காணிப்பிலும் விடப்பட்டன.

1906 – குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது. பாவ்செட் என்பவர் புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.

1909 – கிங்க்ஸ் என்ற போலீஸ் பதக்கம் உருவாக்கப்பட்டது.

1919 – மெட்ராஸ் கமிஷனராக திவான் பகதூர் பராங்குசம் நாயுடு நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர்தான் என்பது பெருமைக்குரியதாகும். பி.பி. தாமஸ் ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

1928 – சிஐடி போலீஸ் பிரிவு சிறப்பு பிரிவு (எஸ்.பி.சிஐடி) மற்றும் குற்றப்பிரிவு (சிபிசிஐடி) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1929 – மெட்ராஸ் சிட்டி போலீஸில் குற்றப்பிரிவு சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவாக பிரித்து அமைக்கப்பட்டது.

1935 பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறும் வகையில் கிராம கண்காணிப்பு கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

1946 – போலீஸ் வயர்லஸ் பிரிவு தொடங்கப்பட்டது.

1947 சென்னையைச் சேர்ந்த அதிகாரி சஞ்சீவி டெல்லி (ஐடீ) ஐபி யின் இயக்குநராக பொறுப்பேற்றார். இப்பதவியில் அமர்ந்த முதலாவது இந்தியர் இவர்தான்.

1951 – மெட்ராஸ் மோப்ப நாய்ப்படை உருவாக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பின்னர் மோப்ப நாய்கள் படை மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமையான மாநிலமாக தமிழகம் விளங்க இந்தப் படைதான் முன்னோடியாக அமைந்தது.

1956 – போலீஸ் ரேடியோ அலவலகம் உருவாக்கப்பட்டது.

1959 – தமிழக காவல்துறை நூற்றாண்டு விழா கண்டது.

1960 – போலீஸ் ஆய்வு அமையம் உருவாக்கப்பட்டது.

1961 மதுரையில் மோப்ப நாய் பிரிவு உருவாக்கப்பட்டது. மாநில தடயவியல் அய்வகத்திற்கு அரசு அனுமதி அளித்தது.

1963 – ல் மெட்ராஸ் போலீஸ் மருத்துவமனை முழ அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது – ஹோம் கார்ட் எனப்படும் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது.

1971 – போலீஸ் கம்ப்யூட்ட்ர் பிரிவு உருவாக்கப்பட்டது. காவல்துறையில் கம்ப்யூட்டர்மயமாக்கலை தொடஙகிய முதல் மாநிலம் தமிழகம் தான். கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் தமிழ்நாடு போலீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது.

தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு சிஐடி பிரிவு உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்து. 

1973 – தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும் பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்.

1976 – ஆவடியில் போலீஸ் போக்குவரத்து பணிமனை பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. சிஐடி பிரிவில் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டது.

1979 – தமிழக கால்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்தது.

1973 – தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும், பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்.

1976 – தமிழக காவல்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது. தமிழக காவல்துறையின் முதலாவது டிஜிபியாக ஸ்ட்ரேஸி நியமிக்கப்பட்டார்.

1981 – தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டது.

1984 – சிஐடி வனப்பரிவு உருவாக்கப்பட்டது.

1989 – தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துடன் இணைக்கப்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படடது.

1991 – காவல்துறை சிறைத்துறை தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்வதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் தனியாக செயல்படத் தொடங்கியது.

1992 – சிறப்பு பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது. படிப்படியாக மாநிலம் முழுவதிலும் இது விரிவுபடுத்தப்பட்டது.

1993 – சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.

1994 – கடலோரக் காவல் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.

1997- மதக் கலவரங்களைத் தடுத்த விரைவு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.

2001 – புதிய நூற்றாண்டில் தமிழக காவல்துறை 91,331 போலீஸார் 11 சரகங்கள் 30 போலீஸ் மாவட்டங்கள், 2 இரயில்வே மாவட்டங்கள் 6 ஆணையரகங்கள், 189 துணை கோட்டங்கள், 287 சரக்கிள்கள், 1276 காவல் நிலையங்களுடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

2002 – காவலர் குறை தீர்ப்பு தினம் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சியை தலைமையிடமாக கொண்டு ஜஜி தலைமையில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.

2003 நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க ஒரு நடமாடும் காவல் நிலையம் உட்பட 80 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தொடங்கப்பட்டன.

2004 – பெண் போலீஸாரைக் கொண்ட தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுதான் அனைத்து மகளிர் போலீஸ் பட்டாலியன் என பெயர் பெற்றதாகும்.

2005 – ல் செங்கை கிழக்கு காவல் மாவட்டம். சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டது.

2006 – ஆசியாவிலேயே மிகப் பெரியதும். நவீனமானதுமான புழல் மத்திய சிறை திறக்கப்பட்டது.

2007 – சென்னை காவல்துறை 150 ஆண்டுகளைத் தொட்டது.

இப்படி எத்தனையோ காலகட்டங்களைத் தாண்டி நமது தமிழக காவல்துறை இன்று சீரும் சிறப்புமாக செயலாற்றி வருகின்றது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் எள்ளளவு குறையாது பணிகளை மேற்கொண்டு வருகிறது.????

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button