கிரைம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி: கயத்தாறு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 20) என்பவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதில் கைதான நெல்லை மாவட்டம் பாளை சாந்திநகர் மெயின்ரோடு பகுதியை பந்தல்ராஜா(34), கயத்தாறு பகுதியை சேர்ந்த அஜித்கண்ணன் (27), வெயிலுமுத்து (44), ஜெயமணிகண்டன் (21), மாரியப்பன் (19), பாளையை சேர்ந்த இசக்கிராஜா (27) மற்றும் மார்ட்டின் (21) ஆகியோரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர். கடந்த 21-ந்தேதி தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான தூத்துக்குடி இந்திராநகர் பகுதியை சேர்ந்த ராம்குமார் (22), பிரதீப்குமார் (22) மற்றும் லிங்கம்(64) ஆகியோரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். இதேபோல் கஞ்சா கடத்திய வழக்கில் தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த சந்தனராஜ் (22) என்பவரை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலெக்டர் செந்தில்ராஜிக்கு பரிந்துரை செய்தார். அதன்படி 11 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் 11 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 249 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button