இந்தியா

முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மகனும் தேனி எம்.பி-யுமான ​ரவீந்திரநாத்​துக்கு​சொந்தமான பெரியகுளம் தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை புலி✍️ ரவீந்திரநாத் டெல்லியில் இருக்கிறார்” – சிறுத்தை உயிரிழந்த வழக்கில் வழக்கறிஞர்கள் விளக்க கடிதம்✍️✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மகனும் தேனி எம்.பி-யுமான ​ரவீந்திரநாத்​துக்கு​சொந்தமான தோட்டம்​பெரியகுளம் அருகே​உள்ளது. இந்தத் தோட்டத்தில்கடந்த செப்டம்பர் 28-ம் தேதி 2​ ​வயது​ ​ஆண் சிறுத்தை உயிரிழந்தது. இந்த விவகாரத்தில் தோட்டத்தில் கிடை அமைத்திருந்தஆடு மேய்க்கும் ​தொழிலாளி அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் என 3​ ​பேரை ​வனத்துறையினர் ​கைது செய்த​னர்.

advertisement by google

இதனைத்தொடர்ந்துசிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தேனி வனத்துறையினர், தோட்ட உரிமையாளர்களான ரவீந்திரநாத் எம்.பி. உள்பட மூன்று பேருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதனடிப்படையில் தியாகராஜன், காளீஸ்வரன் ஆகிய இருவர் தங்கள் இடத்தை ரவீந்திரநாத் எம்.பி.க்கு கடந்த சில ஆண்டுகளுக்கு விற்பனை செய்து விட்டதாக வனத்துறையினரிடம் விளக்கம் அளித்திருந்தனர்.

advertisement by google

​இதற்கிடையேஇவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அலெக்ஸ் பாண்டியனை விடுவிக்கக்கோரியும், எம்.பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் மற்றும் பாதுகாப்பு நலச்சங்கத்தைச் சேர்ந்த 500 பேர் தேனி பெரியகுளம் சாலையில் இருந்து என்.ஆர்.டி நகர் வழியாக கே.ஆர்.ஆர் நகரில் அமைந்துள்ள மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

advertisement by google

​இந்த நிலையில் நேற்று ரவீந்திரநாத் எம்.பி விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், அவர் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் நேரில் வந்து தேனி மாவட்ட வனத்துறையினரிடம் விளக்க கடிதம் அளித்தனர். வழக்கறிஞரும், பழனி முன்னாள் எம்.எல்.ஏவுமான சுப்புரத்தினம், ராஜலட்சுமி, பிரகாஷ் குமார், ரத்னகுமார் உள்ளிட்ட வழக்கறிஞர் குழு முன்னிலையில் வழக்கறிஞர் சந்திரசேகரன் தேனி வன சரகர் அலுவலகத்தில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலியிடம் கடிதம் வழங்கினர்.‌

advertisement by google

​இதுகுறித்து ரவீந்திரநாத் எம்.பி.யின் வழக்கறிஞர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, “7 வது இந்திய குடிநீர் வார கூட்டம் டெல்லியில் குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது. அந்தக்கூட்டத்தில் ரவீந்திரநாத் பங்கேற்றுள்ளார். அதனால் வனத்துறையினர் விசாரணையில் அவரால் ஆஜராக முடியவில்லை.

advertisement by google

சிறுத்தை உயிரிழப்புக்கும் ரவீந்திரநாத் எம்.பிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே அவரை விசாரணையில் இருந்து வனத்துறையினர் விடுவிக்க வேண்டும். மேலும் சிறுத்தை மரணத்தில் உண்மையான குற்றவாளிகளை வனத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

advertisement by google

வனத்துறை தரப்பில் விசாரித்தபோது, “விளக்க கடிதம் தொடர்பாக உயரதிகாரிகளிடம் ஆலோசித்து, மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button