கிரைம்

அபூர்வ திருடன் ,கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் குளித்து, சாப்பிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட திருடன்! – போலீஸ் விசாரணை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

பெங்களூரிலுள்ள இந்திரா நகர்ப் பகுதியில், (ஐ.டி) தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீதர் சுமந்தராய், அவர் மனைவி வசித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 20-ம் தேதி ஐரோப்பாவிலிருந்து தங்களது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பியபோது, தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

advertisement by google

அவர்களால் வீட்டைத் திறக்க இயலவில்லை. வீடு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அதையடுத்து, கதவை உடைத்துக்கொண்டு உள் நுழைந்தவர்கள் வீட்டின் பூஜையறையில் தற்கொலை செய்த நிலையில் கிடந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

advertisement by google

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், தற்கொலை செய்துகொண்டவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தற்கொலை செய்துகொண்ட நபர், திலீப் பகதூர் என்பதும், அவர் பெங்களூருவில் போலீஸாரால் பலமுறை திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர் என்பதும் உறுதியானது. அஸ்ஸாமைச் சேர்ந்த இவர், பெங்களூருவின் கோத்தஹள்ளியில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் ஸ்ரீதரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

advertisement by google

இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய போலீஸார், “சிசிடிவி-யில் பார்த்தபோது திலீப் கடந்த அக்டோபர் 19-ம் தேதி (புதன்கிழமை) வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். மேலும் தன்னுடன், கதவை உடைப்பதற்கான கருவிகள், போட்டுக்கொள்ளத் துணிமணிகளையும் உடனெடுத்து சென்றுள்ளார். படுக்கையறையில் தூங்குவதற்கு முன்பு, சமையல் அறைக்குச் சென்று சாப்பிட்டு, குளித்து உடைமாற்றி, பின்பு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இவர் தற்கொலை செய்துகொண்ட நேரமும், தம்பதியினர் வீட்டிற்கு வந்த நேரமும் கிட்டத்தட்ட ஒரே சமயமாக உள்ளது. அந்த நபர் வீட்டின் பின்புறம் தப்பிச் செல்ல வாய்ப்பிருந்தும், தப்பிக்க முயலாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button