ஹோட்டல்களில் பரோட்டாவிற்கு 18 சதவீத ஜிஎஸ்டி✍️என்னடா, பரோட்டா பிரியர்களுக்கு வந்த சோதனை✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
பரோட்டாவிற்கு 18 சதவீத ஜிஎஸ்டி பரோட்டா பிரியர்களுக்கு வந்த சோதனை! சூரி நகைச்சுவை காட்சியில் கேட்பது போல், “போட்டிக்கு நாங்களும் வரலாமா’’ எனப் பரோட்டா சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் பரோட்டாவிற்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது, உணவகங்களின் நிலையை மோசமாக்கியுள்ளது.
அதெப்படி சப்பாத்தி மற்றும் ரொட்டிக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி, பரோட்டாவிற்கு மட்டும் 18 சதவிகித ஜி.எஸ்.டி என அகமதாபாத்தைச் சேர்ந்த `வாடிலால் இண்டஸ்ட்ரீஸ்’ ஒன்று மேல்முறையீடு செய்து, இந்த வழக்கில் போராடி வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 15 – ஆம் தேதி, குஜராத் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், `பேக் செய்யப்பட்ட பரோட்டாவும், சப்பாத்தி மற்றும் ரொட்டியும் வெவ்வேறானவை’ என தெளிவுபடுத்தி விளக்கம் அளித்துள்ளது.
அதில், “பேக் செய்யப்பட்ட பரோட்டாவை இரண்டு பக்கங்களிலும் பொன்னிறமாகச் சமைக்க 3 – 4 நிமிடங்கள் வரை ஆகும். பரோட்டாவில் இருக்கும் கோதுமையின் அளவும் 36 சதவிகிதத்தில் இருந்து 62 சதவிகிதம் வரை வேறுபடும். அதோடு பரோட்டாவில் கோதுமை மாவு, உருளைக் கிழங்கு, காய்கறிகள், கீரைகள், வெங்காயம் மற்றும் மேத்தி போன்றவை சேர்க்கப்பட்டு, வெவ்வேறு வகையான பரோட்டாக்கள் தயாரிக்கப்படுகின்றன.
முழுவதுமாக வேகவைக்கப்பட்ட உணவிற்கும், பாதி வேகவைக்கப்பட்ட அல்லது சூடுசெய்யப்பட்ட உணவிற்கும் வித்தியாசம் உண்டு. எனவே இத்தகைய காரணங்களைக் கருத்தில் கொண்டு, பரோட்டாவிற்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது சரியே எனத் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இனிமேல் பரோட்டா உண்ணும் போட்டிகளும், `கோட்டை அழிங்க நான் முதல்ல இருந்து சாப்பிடணும்’ என்றும் கூற முடியாது போல…