இந்தியா

இராவணனை தெய்வமாக 300 ஆண்டுகளாக வழிபாடு நடத்தும் கிராம மக்கள் ✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

300 ஆண்டுகளாக ராவண வழிபாடு நடத்தும் கிராம மக்கள் , டெல்லி உள்பட வட மாநிலங்களில் தசரா பண்டிகையான இன்று ராவண வதம் எனப்படும் ராவணன் உருவ பொம்மைகள் எரிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராமத்தில் வசிப்பவர்கள் தசாராவையொட்டி இன்று, இலங்கை மன்னர் ராவணனுக்கு ஆரத்தி எடுத்து வழிபடுகின்றனர். இந்த கிராமத்தில் 10 தலைகள் கொண்ட ராவணனின் கருங்கல் சிலை கொண்ட கோயில் உள்ளது. ராவணனின் புத்திசாலித்தனம் மற்றும் உயர்ந்த குணங்களுக்காக அவரை வணங்கும் பாரம்பரியம், கடந்த 300 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருந்து வருவதாக உள்ளூர்வாசிகள் சிலர் கூறுகின்றனர். அரசியல் காரணங்களுக்காக சீதையைக் கடத்திச் சென்ற ராவணன் அவளுடைய புனிதத்தைப் பாதுகாத்தார் என்பது சங்கோலா கிராம மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.ராவணனின் ஆசீர்வாதத்தால், தங்கள் கிராமத்தில் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது, தங்கள் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். கிராம மக்கள் சிலர் ராமரை நம்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கும் ராவணன் மீது நம்பிக்கை இருக்கிறது, அவருடைய உருவ பொம்மைகளை எரிப்பதில்லை என்று உள்ளூர்வாசியான பிவாஜி தாக்ரே குறிப்பிட்டுள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button