நடிகர் விக்ரம்(56) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்


நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி*
சென்னை : நடிகர் விக்ரம்(56) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று (ஜூலை 08) மாலை வெளியாக உள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்ன மாதிரியான உடல்நல பிரச்னை என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் கடும் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.