சினிமா

விஜய்சேதுபதி சாதாரண ஆளில்லை… நடிகர் பொன்னம்பலம் அதிரடி பேட்டி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

விஜய்சேதுபதி சாதாரண ஆளில்லை… நடிகர் பொன்னம்பலம் அதிரடி!

advertisement by google

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்

advertisement by google

தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன்.

advertisement by google

இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் விஜய் சேதுபதி ஒரு சாதாரண ஆளில்லை என தனியார் யூடியூப் சேனலில் நேர்காணலில் பேசியுள்ளார்.

advertisement by google

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த திரைப்படம் மாஸ்டர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் இருவருக்கும் மிக சரிசமமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

advertisement by google

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது கலையுலக குருவான கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார் முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே செம மிரட்டலாக வெளியாகி இணையதளத்தை கலக்கியது.

advertisement by google

ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரங்களில்,சிறப்பு தோற்றத்திலும் தோன்றும் விஜய் சேதுபதி தான் ஒரு உச்ச நடிகர் என்ற எந்த ஒரு இமேஜும் இல்லாமல் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களிடம் மிக மிக எதார்த்தமாக பழகும் பண்பு பலருக்கும் மிகவும் பிடித்துள்ளது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகள் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். திரைப் பிரபலங்களும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர்.

advertisement by google

இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியிருப்பதாவது விஜய்சேதுபதி சாதாரண ஆளில்லை. அவர் மூளைக்காரர்.. வாழ்க்கைன்னா என்னன்னு நல்லா தெரிஞ்ச ஒருதர், உலகம் என்றால் என்ன, நீ என்றால் என்ன, நான் என்றால் என்ன, மக்கள் என்றால் என்றால் என்ன என அனைத்தையும் தெரிந்த சாமியார் அவர். என நடிகர் பொன்னம்பலம் விஜய்சேதுபதி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button