தமிழ்நாடு மாவட்டம்

வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு கனிமொழி எம்.பி.-அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாஇராதாகிருஷ்ணன் மரியாதை?முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு கனிமொழி எம்.பி.-அமைச்சர்கள் மரியாதை*

advertisement by google

ஓட்டப்பிடாரம்:

advertisement by google

பிறந்த நாளை முன்னிட்டு வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

advertisement by google

சுந்தரலிங்கனார் பிறந்த நாள்

advertisement by google

வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

advertisement by google

இதனை தொடர்ந்து அரசு சார்பில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் 201 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 60 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

advertisement by google

அமைச்சர்கள்

advertisement by google

தொடர்ந்து அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் கண்ணபிரான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

இதில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் காசிவிசுவநாதன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வீரபாண்டியன், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா, அரசு வழக்கறிஞர் பூங்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வீரன் சுந்தரலிங்கனார் நேரடி வாரிசு பொன்ராஜ், வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவன தலைவர் முருகன், செயலாளர் தெய்வேந்திரன், மக்கள் மேம்பாட்டு கழக நிறுவன தலைவர் அதிசயகுமார், கவர்னகிரி பஞ்சாயத்து தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button