தமிழகம்

இந்தியாவின் தமிழ்நாட்டையே ,கொலை, கொள்ளையால் அதிர்ச்சியாக கலக்கிய, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள, புதியம்புத்தூரை சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் இன்று என்கவுண்டரில் பலி✍️ அதிரடி நடவடிக்கையின் முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

இந்தியாவையே கொலை, கொள்ளையால் கலக்கிய, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள, புதியம்புத்தூரை சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் இன்று என்கவுண்டரில் பலி..!
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகிலுள்ள நீராவிமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவன் முருகன். தொடக்கத்தில் வழிப்பறி, திருட்டு போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவன், தனக்கென ஒரு குழுவை அமைத்து கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டான். நீராவிமேடு கிராமத்தை சேர்ந்தவன் என்பதாலும் போலீஸார் பிடியில் சிக்காமல் நீராவி போல மறைவதில் வல்லவன் என்பதாலும் நீராவி என்ற அடைமொழியுடன் வலம் வந்தான்.
தூத்துக்குடி திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சி.அருணா கொலை வழக்கு, சென்னை ஆசிரியை செயின் பறிப்பு வழக்குகள் மூலம் பிரபலமான ரவுடியாக மாறினான். தென் மாவட்ட ரவுடிக் கும்பல்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தான். கொள்ளையடிக்கும் பணத்தை வைத்து நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த இக்கும்பல் பணம் காலியானவுடன் மீண்டும் கொலை, கொள்ளை கூலிப்படையாக மாறுவது வழக்கமாகும். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்தக் கும்பல் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒட்டன்சத்திரத்தில் உள்ள கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் தனிப்படையினர் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் இவன் தலைமறைவாக இருந்து வந்துள்ளான். இந்நிலையில், தற்போது நெல்லை மாவட்டத்தை சுற்றி வலம் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்று (புதன்கிழமை) காலை திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார், நெல்லை மாவட்டம், நாங்குநேரி – களக்காடு இடையே உள்ள கடம்போடுவாழ்வு பெட்ரோல் பங்க் அருகில் தலைமறைவாக இருந்த இவரை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது நீராவி முருகன், காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button