இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறு

பிரதமர்மோடி பேசியபிறகுதான் உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை அறிந்துகொண்டேன் என மகேந்திரா நிறுவணசேர்மன் ஆனந்த் மகேந்திரா பரபரப்பாக கூறினார்

advertisement by google

பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசிய பிறகுதான் உலகின் பழமையான மொழி தமிழ், என்பதை அறிந்து கொண்டேன். இதுவரை இது தெரியாமல் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன், என்று மகேந்திரா நிறுவன சேர்மன், ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

advertisement by google

சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியின் புலவர் இவ்வாறு பாடியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.இன்றைய தினம் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக விமான நிலையத்தில் பேசியபோது, உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்று நான் அமெரிக்காவில் பேசியது அந்த நாட்டு ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்று சுட்டிக்காட்டினாஇந்த நிலையில்தான் ஆனந்த் மஹிந்திரா ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்தான் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என்று தெரிவிக்கும் வரை, நான் அது பற்றி அறியாமல் இருந்து விட்டேன். இதற்காக வெட்கப்படுகிறேன். இப்படியான ஒரு சிறந்த மொழியையும் அதன் பெருமையையும் மொத்த இந்தியாவுக்கும் பரப்பிட வேண்டும்.நான் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் தான் பயின்றேன். அப்போதே, தமிழ் கற்றிருக்க வேண்டும். ஆனால் திட்டுவதற்காக, உடன் படிக்கும் மாணவர்களிடம் இருந்து சில வார்த்தைகளை மட்டுமே, கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button