விரிவான மதியம்மாலை செய்திகள்(30.9.2019)தமிழகம் இந்தியாஉலகம்
????விண்மீண்நியூஸ்????? கமலஹாசன் சம்மதித்தால் தேவர்மகன் இரண்டாம் பாகம் எடுப்பேன் , இதை அவரிடமே கூறி உள்ளேன், நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல நடிகர் விஜய் சேதுபதியே காரணம் , விரைவில் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளேன்
இயக்குனர் சேரன்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
அத்திவரதர் திருவிழாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகையாக ரூ.3000 வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது வரை அத்தொகை வந்து சேரவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் துப்புரவு பணியாளர்கள் மனு
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ?% தமிழ் மீது அதிக பற்று வைத்துள்ள மோடிக்கு எதிராக ட்ரெண்ட் செய்வது தவறானது
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ?% பீகார் : பாட்னாவில் வெள்ளத்தில் தனது வீட்டில் சிக்கித்தவித்த துணை முதல்வர் சுசில் மோடி தேசிய , மாநில பேரிடர் மீட்பு படையினரால் மீட்பு
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ?% தமிழ் மொழி சிறப்பு வாய்ந்த மொழி , அதன் சிறப்பை சொல்லித்தான் ஆகவேண்டும்
?% ஐஐடி விழாவில் பிரதமர் மோடி தமிழ் பற்றி பேசியதை வரவேற்கிறோம்
?% தமிழகத்தில் இந்தியை திணிக்க மாட்டோம் என பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும்
திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் *
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ?% திருச்சி : பெரிய கடை வீதியில் ஐந்து லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் , புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் அமலாராம் கைது
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ?% உத்தரபிரதேசம் : பல்லியா மாவட்ட சிறைக்குள் வெள்ளம் புகுந்ததால் 900 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்
?% 500 கைதிகள் அஸம்கார் சிறைக்கும் மற்ற கைதிகள் அம்பேத்கர் நகர் சிறைக்கும் மாற்றப்பட்டனர்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
பிரதமர் மோடி தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசியதை வரவேற்கிறோம், அதே வேளையில் இந்தியை திணிக்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் – திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன்
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
தொடர்ந்து இந்தி மொழிக்கு முன்னுரிமை கொடுத்து வந்த மோடி தற்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE
?மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் அழைப்பு…
நேரலை செய்திகள்
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ?% ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21ம் தேதி முதல் திகார் சிறையில் இருந்து வருகிறார்
?% ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு
?% ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்
⟢⸨?⸩⟢ ?% ƝⒺⓌⓈ ⟣⸨?⸩⟣
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
இலங்கை செய்தி 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்புக்கான விண்ணப்ப இறுதி தேதி அக்டோபர் 04 வரை நீடிப்பு – – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம்
சவரனுக்கு ரூ.120 குறைந்து 1 சவரன் ரூ.28,704க்கு விற்பனை
கிராமுக்கு ரூ.15 குறைந்து 1 கிராம் ரூ.3,588க்கு விற்பனை
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: *எல்லோருக்கும் எல்லாம் பெற வேண்டும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த சிறப்பு திட்டங்களை நிறைவேற்றுவோம் *அமைச்சர் எஸ் பி வேலுமணி பெருமிதம்.*
தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மகத்தான பல திட்டங்களை செயல்படுத்திய மகளிர் முன்னேற்றத்திற்காக ஏணியாக விளங்கினார்.. அமைச்சர்மாண்புமிகு எஸ் பி வேலுமணி எழுச்சி உரை….
?கே.தமிழகம்சேட்✍
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கூட்டரங்கத்தில் சமூக நலத்துறையின் மூலம் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், 2000 படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ.14.11 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி தொகையுடன் தாலிக்கு தங்கத்தை, வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்;
முதலமைச்சர் அவர்கள் அம்மா அவர்களின் வழியில் மகளிர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பொற்கால ஆட்சி நடத்தி வருகின்றார்கள். ஏழை குடும்பங்களுக்கு, விலையில்லா மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், விலையில்லா வெள்ளாடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டம், முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையர் திருமண நிதியுதவித் திட்டம், உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையிலான இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் கல்வி பயிலும் பெண்களின் சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், பொருளாதாரம் ஈட்டும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறினார்.
சமூக நலத்துறையின் மூலம் ஏழை எளிய மகளிர்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், ஈ.வே.ரா மணியம்மையார் விதவைகள் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் திருமணத்திற்கு 8 கிராம் தங்கத்துடன் நிதியுதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அம்மா அவர்களால் 2011 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பின்படி, பெண்கள் அனைவரும் கல்வி கற்கவேண்டும் என்ற இலக்குடன் 17.05.2011க்கு பிறகு நடைபெறும் திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழை குடும்பத்தைச் சார்ந்த பெண்களின் திருமணத்திற்கு ரூ.25,000/- ம், மற்றும் 4 கிராம் தாலிக்கு தங்கமும் பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50,000/-ம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கும் சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற வரவேற்பு மற்றும் பெண்களின் முன்னேற்றம், கல்வி நிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் போன்ற காரணங்களால், கருத்தில் கொண்டு அம்மா அவர்களின் 2016 தேர்தல் அறிவிப்பின்படி முதல் ஐந்து கையெழுத்துகளில் ஒன்றாக 23.05.2016- க்கு பிறகு நடைபெறும் திருமணங்களுக்கு வழங்கப்படும் தங்க நாணம் 4- கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தப்படும் என்று மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்தார்கள். 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 4 கிராம தங்கத்துடன் கூடிய திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 27,563 பயனாளிகளுக்கு, ரூ.104.5/கோடி, 2016 முதல் 2019-ஆம் ஆண்டு வரை 7,௩௩௧ பயனாளிகளுக்கு, ரூ.46.12கோடி மதிப்பில் திருமண நிதியுதவி தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இவ்விழாவில் 10ம் வகுப்பு பயின்ற பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக ரூ.25,000/- வீதம் 514 பயனாளிகளுக்கு ரூ.1.28கோடி மதிப்பில், பட்டம் மற்றும் பட்டயம் பயின்ற பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக ரூ.50,000/- வீதம் 1,486 பயனாளிகளுக்கு ரூ.7.43கோடி மதிப்பில் திருமண நிதியுதவித் தொகையும், 2000 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம், தங்கத்தின் மதிப்பீடு ரூ.5.39கோடி என மொத்தமாக ரூ.14.11கோடி மதிப்பிலான தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி தொகையாக தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஏழு ஆண்களில் திருமண நிதியுதவித் திட்டத்தின் மூலம் 36,894 பயனாளிகளுக்கு ரூ.164.08கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவரையும், நமது சமுதாயத்தின் அங்கமாக அங்கீகரித்து, அவர்கள் தங்களுடைய வாழ்வில் வளம் பெற கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த 65 திருநங்கையர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் சுயதொழில் துவங்க ரூ.9,00,000,- (ரூபாய் ஒன்பது இலட்சம் மட்டும்) வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இவ்விழாவில் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி. ஆர்.ஜி. அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், வி.சி. ஆறுக்குட்டி, எட்டிமடை எ.சண்முகம், வி.பி.கந்தசாமி, கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) தனலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான நபருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், அரசு வேலையும் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பில்கிஸ் பானு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு 2 வார காலத்திற்கு இந்த உத்தரவை அமல்படுத்த குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு; அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 28பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : வால்பாறையில் மாட்டுத்தொழுவமாக கல்லூரி கலையரங்கம் மாறியுள்ள நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது அரசு கலை அறிவியல் கல்லூரி. இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கல்லூரி வளாகத்தில் ரூ 25 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
சமீப காலமாக, கல்லூரி கலையரங்கம் மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது. முன்னதாக, இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக செயல்பட்டு வந்தபோது, அடிக்கடி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. தற்போது, எவ்வித நிகழ்ச்சிகள் நடைபெறாமல் மாட்டு உரிமையாளர்களுக்கு சாதகமாக மாறி விட்டது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சரவணம்பட்டி காவல் எல்லையில் புதியதாக 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்கவிழா நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் இந்த விழாவை துவங்கி வைத்தார்.
கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை,கொள்ளை,வழிப்பறி, ஆள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவும் மூன்றாம் கண் என சொல்லப்படுகிற கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியானது, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.
இதில், ஆர்எஸ்புரத்தில் துவங்கி, பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, காட்டூர் காவல் எல்லை, போத்தனூர் காவல் எல்லை, சிங்காநல்லூர் காவல் எல்லை என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் சரவணம்பட்டி காவல் எல்லையில் 100 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவினை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் சரவணம்பட்டி காவல் நிலைய பகுதியில் துவங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அவர் இந்த கண்காணிப்பு கேமரா வழங்கிய தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள், சமூக சேவகர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த கண்காணிப்பு கேமராக்கள், சரவணம்பட்டி காவல் எல்லையின் முக்கிய பகுதிகளான பெருமாள் கோவில் வீதி, ஸ்ரீராம் நகர், ராதா லேடீஸ் ஹாஸ்டல் பகுதி, சிவன் கோயில் பகுதி, கோவை சத்தி சாலை, உட்பட பல்வேறு பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கேமரா அமைக்கும் நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், செல்வக்குமார், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல சரவணம்பட்டி காவல் எல்லையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்ட ஆய்வாளர் செல்வராஜ் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மோசடி புகார் தொடர்பாக மனு அளிக்க வந்த பெண் தற்கொலைக்கு முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அடுத்த அன்னூர் ஆலங்குட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி வசந்தா. மகன் மற்றும் மகளுடன் இவர்கள் வசித்து வரும் நிலையில், முருகேசன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பணத்தேவை காரணமாக வசந்தா தனது நகைகளை அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் மூலமாக கடந்த 2017ம் ஆண்டு வங்கியில் அடமானம் வைக்க கொடுத்துள்ளார்.
17 சவரன் நகைகளை அடமானம் வைத்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெற்ற நிலையில், அதனை வசந்தா வட்டியும் முதலுமாக கொடுத்துவிட்ட பிறகு நகைகளை திரும்ப தருமாறு விஜயகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால், விஜயகுமார் நகைகளை தனது பெயரில் வங்கியில் அடமானம் வைத்துவிட்டு நகைகளை திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், நகைகளை திரும்ப கேட்ட வசந்தா மீது அவதூறு தகவல்களை பரப்பியதோடு அவரது குடும்பத்தினரையும் தனது செல்வாக்கால் ஊரை விட்டு விலக்கி வைத்ததாக விஜயகுமார் மீது வசந்தா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனு அளிக்க வசந்தா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அப்போது, அவரது பையில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில், மண்ணெண்ணெயை அவர் மறைத்து வைத்திருந்ததை பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தற்கொலை முயற்சி யோசனையுடன் வந்த வசந்தாவை சாந்தப்படுத்திய காவலர்கள், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வாயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிகமாக வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர் மீது நடவடிக்கை கோரி முட்டி போட்டு ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஜெகதீசனார் என்பவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், தான் வசித்து வரும் பகுதியில் இமயம் ஸ்டார் விஷன் என்ற பெயரில் வெற்றிவேல் என்பவர் அரசு செட்டாப் பாக்ஸ் சேவை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும், நிர்மான கட்டணமாக ரூ.200 மட்டுமே வசூலிக்க வேண்டும், மாதம் கட்டணமாக 154 மட்டுமே வாங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில், செட்டாப் பாக்ஸ்களுக்கு 300 ரூபாயும், நிர்மான கட்டணமாக 180 ரூபாயும் மாதம் 180 ரூபாய் கட்டணமாகவும், வெற்றிவேல் வசூலித்து வருவதாக அம்மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் பல லட்சம் ரூபாயை வெற்றிவேல் மோசடி செய்வதாகவும் இது தொடர்பாக புகார் அளிக்க அரசு அறிவித்துள்ள எண்களுக்கு அழைத்தால் யாரும் எடுப்பதில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உரிய நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஜெகதீசனார் ஆட்சியர் அலுவலகத்தில் முட்டி போட்டு சென்று மனு அளித்தார்.
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : கீழமை நீதிபதிகள் தேர்வில் வேற்று மாநிலத்தவர்கள் பங்கேற்பதை அனுமதிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி மூலமாக நடத்தப்படும் தேர்வாணைய தேர்வுகளில், அனைத்து மாநிலத்தவரும் கலந்து கொள்ளலாம் என கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தும் வகையில் இந்தாண்டு முதல் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பிற மாநில பெயர்களை பதாகைகளில் எழுதி கழுத்தில் அணிந்தபடி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர்கள், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தேர்வாணைய தேர்வில் தமிழ் மொழி பாடம் ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்
இது குறித்து பேசிய அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தமிழக அரசின் இந்த அரசாணை காரணமாக தமிழகத்தின் கீழமை நீதிமன்றங்களில் தமிழர்கள் நீதிபதிகளாகவும், நடுவர்களாகவும் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் உருவாகும் எனவும் வேறு மாநில நீதிபதிகள் பணியில் அமர்த்தப்பட்டால் சாமானிய மக்கள் வழக்கு ஆவணங்களை நீதிபதிக்கு ஏற்றார் போல், இந்தி அல்லது பிற மொழிகளில் வழங்க வேண்டிய சிக்கல் உருவாகும் என்பதால் இதனை திரும்ப பெற வேண்டும் என ஆட்சியர் மூலமாக அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ,✍?✅கோவை : காந்தி ஜெயந்தி தினமான வரும் அக்டோபர் 2-ம் தேதியன்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகளை மூடும்படி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி “காந்தி ஜெயந்தி” அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றம் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படியும், அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனூர் மாடு அறுவை மனைகள், துடியலூரில் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியில் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது.
இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் வரும் அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : உக்கடம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் 62 புதிய பேருந்துகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பொது மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவை வழங்கி வருகிறது.
மேலும் புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை துவக்கி வைத்தல், புதிய பணிமனைகள் அலுவலக கட்டடங்கள், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி தரம் மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள் கட்டுதல், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2018-2019ம் ஆண்டிற்கு 3000 புதிய பேருந்துகள் ரூ.893 கோடி செலவில் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு, அதில் கோவை போக்குவரத்துக் கழகத்திற்கு 170 பேருந்துகள் சுமார் 50.6 கோடி செலவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கோவை மண்டலத்திற்கு 30 புதிய பேருந்துகள் கடந்த (04.07.2019) அன்று முதலமைச்சர் அவர்களால் சென்னையில் துவக்கி வைக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இரண்டாவது கட்டமாக கோவை மண்டலத்திற்கு 16 புதிய பேருந்துகள் கடந்த (14.08.2019) அன்று முதலமைச்சர் அவர்களால் சென்னையில் துவக்கி வைக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து கோவை மண்டலத்திலிருந்து 62 புதிய பேருந்துகள் (22 புறநகர் பேருந்துகள், 40 நகரப் பேருந்துகள்) இதில் 14 பேருந்துகள் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலிலும், 48 பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்தும் இன்று(29.09.2019) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் உட்பட பலர் கலந்து கொண்டர்.
[9/30, 4:59 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை மாவட்டம் குனியமுத்தூர், செல்வபுரம், தொண்டாமுத்தூர், பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இன்று நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் கலந்துகொண்டு 360 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்;
தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் அம்மா அவர்கள், பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மகத்தான பல திட்டங்களைச் செயல்படுத்தி மகளிர் முன்னேற்றத்திற்கு ஏணியாக விளங்கினார். சமுதாயத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமான நல்வாழ்வு மிகவும் அவசியம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் முன்னோர்கள் கருத்தாகும். குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடியான திட்டம் தான் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம். மனிதவள மேம்பாட்டின் ஆணிவேராகவும், அடித்தளமாகவும் இருப்பவர்கள் பெண்களும், குழந்தைகளும். அவர்களது நலனைப் பேணிக் காப்பது மிகவும் அவசியமாகும் என்றார்.
இன்றைய குழந்தைகள் எதிர்கால சந்ததியினர். இவர்கள் இன்று ஆரோக்கியமாக இருந்தால்தான் நாளைய சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இரண்டு வயதை அடைவதற்கு முன் ஒரு குழந்தைக்கு ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக் குறைபாட்டைச் சரிசெய்வது எளிதில்லை. தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பெற்ற சிறப்புத்திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையிலும், எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற உன்னத நோக்கம் கொண்டதாகவும் விளங்கி வருவதாக கூறினார்.
அதனடிப்படையில், இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசையுடன் 5 வகையான கலவை சாதங்களும் கர்ப்ப காலங்களில் உணவு உண்ண வேண்டும் என்பதன் அடையாளமாக வழங்கப்படுகின்றது. இதை மனதில் கொண்டு கர்ப்பகால முன், பின் பராமரிப்பு, குழந்தைக்கு உணவூட்டும் முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள் போன்றவை குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தவளைகாப்பு நடத்தப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தினை உருவாக்க வேண்டுமென வாழ்த்துவதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) தனலிங்கம், மாவட்ட திட்ட அலுவலர்( ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்) மீனாட்சி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.