இந்தியா

உடற்பயிற்சி செய்த பிரதமர் மோடி✍️உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பரபரப்பு உரை✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

உடற்பயிற்சி செய்த பிரதமர் மோடி*

advertisement by google

உத்தரப் பிரதேசம் மீரட்டில் மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழக கட்டிடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

advertisement by google

பின்னர் பேசிய அவர், “மேஜர் தயான் சந்தின் இங்குதான் பணியாற்றியுள்ளார். நாட்டின் உயரிய விளையாட்டு விருதை அவரின் பெயரில்தான் மத்திய அரசு வழங்கிவருகிறது. இப்போது மீரட்டின் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு மேஜர் தயான் சந்த் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

advertisement by google

700 கோடி மதிப்பிலான இந்தப் பல்கலைக்கழகம் இளைஞர்களுக்கு சர்வதேச விளையாட்டு வசதிகளை வழங்கும். ஒவ்வொரு ஆண்டும், 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் இங்கிருந்து பட்டம் பெறுவார்கள். முன்பெல்லாம், குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்கள் சட்ட விரோதமாக நிலங்களை அபரித்துவந்தனர்.

advertisement by google

பல்வேறு விளையாட்டுக் கழகங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கையில், விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அறிவியல், கணிதம் அல்லது பிற படிப்புகளின் வகைகளில் விளையாட்டும் சேர்ந்துள்ளது. இது ஒரு பிரத்யேக பாடமாக இருக்கும்” என்றார்.

advertisement by google

அடிக்கல் நாட்டிய பிறகு, பல்கலைக்கழகத்தில் உள்ள உடற் பயிற்சி மைதானத்திற்கு சென்ற பிரதமர் உடற்பயிற்சி மேற்கொண்டார்.

advertisement by google

இதையும் படிக்க |‘‘ராணுவத்தினரை எண்ணி பெருமிதம்’’: விபின் ராவத்தின் கடைசி வாழ்த்துச் செய்தி!

advertisement by google

முன்னதாக, இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “மீரட்டில் உள்ள சர்தானா நகரின் சாலவா மற்றும் கைலி கிராமங்களில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டுக் கலாசாரத்தை வளர்ப்பது மற்றும் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகியவை பிரதமர் கவனம் செலுத்தும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button