இந்தியாஉலக செய்திகள்தமிழகம்

உத்தரபிரதேச சட்டமன்றதேர்தலில் 403 இடங்களில் பிராமண வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், அதிர்ச்சியில் இந்தியா✍️ பாரதிய ஜனதா கட்சியில் 46, சமாஜ்வாதி கட்சியில் 3, பகுஜன் சமாஜ் கட்சியில் 3, காங்கிரஸில் 1, அப்னா தளம் கட்சியில் 1 மற்றும் சுயேச்சைகள் இரண்டு பேர்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விண்மீண்தீ நியூஸ்:

advertisement by google

உத்திரபிரதேச தேர்தலில் யோகி ஆதித்யாத் தலைமையில் களத்தில் பிராமணர்கள் – பாரதிய ஜனதா உத்தி எடுபடுமா?

advertisement by google

உத்தர பிரதேசத்தின் 17வது சட்டப்பேரவையில் உள்ள 403 இடங்களில் பிராமண வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் 46, சமாஜ்வாதி கட்சியில் 3, பகுஜன் சமாஜ் கட்சியில் 3, காங்கிரஸில் 1, அப்னா தளம் கட்சியில் 1 மற்றும் சுயேச்சைகள் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

advertisement by google

2017இல் நடந்த தேர்தலில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியை வெளிப்படையாக ஆதரித்தனர் என்பது இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து தெளிவாகிறது.

advertisement by google

ஆனால் சமீபத்திய சில நிகழ்வுகள், அங்குள்ள நிலைமை மாறி வருவதைக் காட்டுகின்றன.

advertisement by google

எடுத்துக்காட்டாக, டிசம்பர் 26ஆம் தேதி, உத்தர பிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து ட்வீட் செய்தார் – அதில் “உத்தர பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, கோரக்பூரின் பாஜக மாநிலங்களவை எம்.பி. சிவ் பிரதாப் சுக்லா, பாஜக எம்பியும், பாஜக தேசிய செயலாளருமான ஹரிஷ் த்விவேதி, பாஜக பொதுச்செயலாளர் சுனில் பன்சால், குஜராத்தின் மாநிலங்களவை எம்பி ராம்பாய் மொகாரியா மற்றும் இதர மூத்த பாஜக சகாக்களுடன் பிரதமர் நரேந்திர மோதியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியைக் கேட்டேன்” என்று கூறியிருந்தார்.

advertisement by google

டிசம்பர் 27ஆம் தேதி, பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியான யுவ மோர்ச்சாவின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் அபிஜத் மிஸ்ராவும், கட்சியின் உத்தர பிரதேச பிராமண தலைவர்கள் சேர்ந்து பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து அவருக்கு பகவான் பரசுராமரின் படத்தைப் பரிசளித்தனர். அந்த படத்தை அவர் ட்வீட் செய்தார்.

advertisement by google

அந் படத்தில், உத்தர பிரதேச அமைச்சர்கள் பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும் ஸ்ரீகாந்த் சர்மாவுடன், எம்.பி.க்கள் மகேஷ் சர்மா, சிவ பிரதாப் சுக்லா ஆகியோரும் இருந்தனர். அந்த ட்வீட்டில் அபிஜத் மிஸ்ரா, “உத்தரபிரதேசத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஜே.பி. நட்டாவின் இல்லத்தில் சந்திப்பு” என்று குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு தேர்தலைக் கருத்தில் கொண்டு, உத்தர பிரதேசத்தில் பிராமணர்களைக் கட்சியில் தக்கவைக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் மாநிலத்தைச் சேர்ந்த பிராமணத் தலைவர்கள் உறுப்பினர்களாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோரக்பூரின் மாநிலங்களவை எம்பி ஷிவ் பிரதாப் சுக்லா தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட உள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பான வாட்ஸ்அப் செய்திகள் வைரலாகப் பரவத் தொடங்கியது. அரசாங்கத்தில் பிராமணர்களின் கோரிக்கை செவிமடுக்கப்படுவதில்லை என்று கட்சி மேலிடத்துக்கு பிராமண தலைவர்கள் கோபமாகத் தெரிவித்ததாக அந்த தகவல்கள் இருந்தன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிராமணர்களின் நம்பிக்கை முழுவதுமாக யோகி அரசின் மீது இருந்தால், மாநிலத்தின் வலிமைமிக்க பிராமணத் தலைவர்களை டெல்லியில் மத்தியத் தலைமை சந்திக்கும் செய்தி ஏன் வருகிறது என்ற கேள்விகள் எழத் தொடங்கின.

இந்தக் கூட்டங்கள் குறித்தும், அவற்றில் நடைபெற்ற விவாதங்கள் குறித்தும் தற்போது வரை கட்சி தரப்பில் இருந்து முறையான தகவல்கள் வெளிவரவில்லை.

எம்.பி. ஷிவ் பிரதாப் சுக்லா உண்மையில் அத்தகைய குழு அல்லது பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுகிறாரா என்பதை நாங்கள் அறிய முயற்சித்தோம்,

ஆனால் அவர் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

பிராமண வாக்காளர்கள் தொடர்பாக பாஜகவின் கவலைகள் மற்றும் சவால்கள் என்ன என்பதை இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இரு தலைவர்களிடமிருந்தும் அறிய பிபிசி முயன்றது.

இதில் கலந்து கொண்ட அபிஜாத் மிஸ்ரா, இந்தக் குழு அமைக்கப்பட்டதை உறுதி செய்து, தானும் இந்தக் குழுவில் உறுப்பினராக உள்ளதாக தெரிவித்தார்.

இந்தக் குழுவைப் பற்றி விரிவாக விவரித்த அவர், “எம்.பி. சிவ் பிரதாப் சுக்லா இந்தக் குழுவின் தலைவராக உள்ளார், என்னுடன் இந்தக் குழுவில் எம்.பி. மகேஷ் சர்மா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ராம் பாய் மொகாரியா ஆகியோர் உள்ளனர்.

இந்தக் குழு அறிவுஜீவிகளுடன் இணைந்து செயல்படும். அனைத்து மக்களிடமும் பேசி, அனைவருக்கும் விளக்கமளித்த பின், அவர்களை மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடுத்துவோம்.

பிராமண வகுப்பைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் திட்டங்களை உருவாக்கும் பணியையும் இந்தக் குழு கவனிக்கும். மாநிலத்தில் பிராமண அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் யாராக இருந்தாலும், அனைவரும் அதில் ஈடுபடுத்தப்படுவார்கள்,” என்று விளக்கினார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிராமணர்களின் அதிருப்தி அதிகரித்து வருவது குறித்து அபிஜாத் மிஸ்ரா கூறும்போது, “பிராமண சமுதாய மக்களும் முழு ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க ஒத்துழைக்க வேண்டும். கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் அவ

ை அகற்றப்பட வேண்டும். அவர்களின் கருத்தை கேட்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

‘சொந்த தொகுதிகளில் சில பணிகள் நிறைவு பெறாததால் சிலர் கோபப்படுவார்கள்’ என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

“இப்போது 10 வேலைகளில் நான்கு மீதம் உள்ளது என்றால், மக்கள் கோபப்படுகிறார்கள். எங்கள் வேலை தான். ஆனால் அது முடியவில்லை என்றால் கோபம் வருவது இயல்பு. அத்தகைய சூழ்நிலையில், கட்சியில் இருந்து யாராவது வந்தால் நாங்கள் எங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். எங்களுக்கு உத்தரவாதம் கிடைத்தால், நாங்கள் கட்சிப் பணிக்குத் திரும்புகிறோம்,” என்று அவர் விளக்கினார்.

“மக்களுக்குச் சிறு சிறு விஷயங்களில் வெறுப்பு இருக்கிறது, ஆனால் படிப்படியாக அவை சரிசெய்யப்படும். மிகப் பெரிய கட்சி, மிகப் பெரிய மாநிலம் என்றால், எங்கோ ஏதோ இது போல இருப்பது இயல்பு.”

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட, பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு தலைவர், பிபிசியிடம், “அன்றைய கூட்டத்தில் மாநிலத்தில் இருந்து சுமார் 15 பிராமணத் தலைவர்கள் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி கட்சியுடன் பாஜகவுக்கு மோதல் உண்டு. அக்கட்சியை பிராமணர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் தான் அதிகபட்சமாக பிராமணர்களின் அடக்குமுறை நடைபெறுகிறது,” என்று தெரிவித்தார்.

இந்தத் தலைவர், “இந்த கூட்டத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜகவின் மற்றொரு பிராமண முகமாகக் கருதப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி, கூட்டத்தில் இருந்த போதும் அவர் எதுவும் பேசவில்லை.” என்று தெரிவித்தார்.

அஜய் மிஸ்ரா டேனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் கெரியில் விவசாயிகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தற்போது சிறையில் உள்ளார்.

இந்தக் குழுவின் தலைவராக ஷிவ் பிரதாப் சுக்லா நியமிக்கப்பட்டது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் யோகேஷ் மிஸ்ரா கூறுகையில், ‘சிவ் பிரதாப் சுக்லாவுக்கும் யோகி ஆதித்யநாத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இந்த உத்திகளுக்கு உட்பட்டு பாஜக தொடர்ந்து எடுத்து வரும் முடிவுகள், எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கிறார்.

“ஷிவ் பிரதாப் சுக்லா அந்த பகுதியில் தொடர்ந்து வசிப்பதால் யோகி ஆதித்யநாத்துடன் ஒத்துப்போகவில்லை என்று நான் கருதுகிறேன். சட்டப் பேரவைத் தேர்தலிலும் யோகி ஆதித்யநாத் ஷிவ் பிரதாப் சுக்லாவை தோற்கடித்தார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ஷிவ் பிரதாப் சுக்லாவிற்கான முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. அவர், தன் சமூகத்திற்கு ஏதாவது செய்திருக்கக்கூடிய முக்கிய இடத்தைப் பெறவில்லை.” என்று யோகேஷ் மிஸ்ரா கூறுகிறார்.

யோகிக்கு எதிராக உருவாக்கப்படும் பிராமணர்களுக்கு எதிரான பிம்பத்தை பாஜக சமாளிப்பது அவசியம் என்று யோகேஷ் மிஸ்ரா நம்புகிறார், ஆனால் ஷிவ் பிரதாப் சுக்லா சரியான தேர்வு அல்ல என்றும் அவர் கருதுகிறார்.

மேலும் அவர் கூறும்போது, “அவர் ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்த எம்.பி. இது உண்மைதான். ஆனால் எந்த நெருக்கடியிலும் பிராமணர்கள் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் அவருக்கு என்ன அதிகாரம் கொடுத்தீர்கள். அது போன்ற அதிகாரத்தை பாஜக உத்தரப்பிரதேசத்தில் யாருக்கும் கொடுக்கவில்லை.”

“சிவ் பிரதாப் சுக்லவின் செல்வாக்கு அதிகரித்தால், டாக்கூர் சமூகத்தினருக்கு உங்கள் மீது கோபம் வருவது உறுதி. 12 சதவீதம் பிராமண வாக்குகள், 7 சதவீதம் டாக்கூர் வாக்குகள். எனவே தேர்தலில் ஒரு சமூகத்தினரின் வாக்குகளைப் பெற இன்னொரு சமூகத்தை விரோதித்துக்கொள்ள முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

இருப்பினும், கடந்த காலங்களில் முதல்வர் யோகி மற்றும் சிவபிரதாப் சுக்லா இடையே ஏற்பட்ட விரிசல் குறித்து பாஜக தலைவர் அபிஜாத் மிஸ்ரா கூறும்போது, “கட்சியில் அனைவருக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன, ஆனால் மன வேறுபாடு இல்லை. பாஜக ஜனநாயக அடிப்படையில் செயல்படும் ஒரு அமைப்பு. அனைவருக்கும் இங்கு பேசும் உரிமை உள்ளது. ஜனநாயக அமைப்பு இருந்தால் மட்டுமே தனது கருத்தை முன்வைக்கும் சுதந்தரம் சாத்தியமாகிறது” என்று கூறுகிறார்.

தற்சமயம், சமாஜ்வாதி கட்சி பிஜேபியை பிராமண விரோதக் கட்சி என்று நிலைநாட்டுவதில் ஈடுபட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் கேபினட் அமைச்சருமான ஐபி சிங் ட்விட்டரில், “டாக்கூர் யோகிக்கு இப்போது பிராமண சமூகத்தின் நினைவே இல்லை. அவர் முதல்வராக ஆனவுடன் கோரக்பூர் பூர்வாஞ்சல் மட்டுமல்ல, உ.பி.யின் மிகப்பெரிய பிராமண தலைவரான பண்டிட் ஸ்ரீ ஹரிசங்கர் திவாரி வீட்டில் சோதனை செய்து, அவரை அவமானப்படுத்தியது தேவையற்றது. அவரது மகள் குஷி துபேயின் திருமணம் முடிந்த நான்கே நாட்களில் அந்தப் பெண் சிறையில் அடைக்கப்பட்டாள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில், ஹரிசங்கர் திவாரி கோரக்பூரின் வலுவான பிராமணத் தலைவர் ஆவார், அவர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையில் அவருக்கே நேரடியாகச் சவாலாக இருக்கக்கூடியவர். மேலும் சமீபத்தில் பகுஜன் சமாஜ

் கட்சியில் இருந்து விலகி குடும்ப சகிதமாக சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.

திவாரி மற்றும் அவரது குடும்பத்தினரை யோகி அரசு குறிவைத்துள்ளதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டுகிறது.

கான்பூரில் எட்டு போலீஸ்காரர்களை கொலை செய்த வழக்கில் இணை குற்றவாளியான அமர் துபேயின் புதுமண மனைவி குஷி துபே, திருமணமான உடனேயே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரிய விகாஸ் துபே என்கவுன்டர் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், குஷிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை, மேலும் யோகி அரசு பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியதாக எதிர்கட்சிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் சிங்கும் இந்தப் பிரச்னையை தொடர்ந்து எழுப்பி வருகிறார்.

மூத்த பத்திரிகையாளர் சுமன் குப்தா, பிராமணர்களின் எண்ணிக்கை குறித்த பிரச்சனை மட்டுமல்ல இது என்று கருதுகிறார். “உண்மையில், இது சமூகத்தில் கருத்துருவாக்கும் பிரிவாகும். இந்த முறை பிராமணர்களுக்கு ஒருதலைபட்ச நாட்டம் இல்லை என்று பாஜக நினைக்கலாம், இதற்கு ஒரு பெரிய காரணம், மாநில முதல்வராக இருப்பவர் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாக இருக்கலாம்.

இத்தேர்தலில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் முகமே இல்லை, ஆனால், இந்த முறை அவர் பெயரில்தான் தேர்தல் நடக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இது தாக்கூர்களின் அரசு என்ற அடிப்படையில் பிராமணர்கள் ஆதரவை இழக்க கட்சி தயாராக இல்லை என்பது நிபுணர்கள் கருத்து.

துணை முதல்வர் தினேஷ் சர்மாவும் பிராமணர்தான். ஆனால் சுமன் குப்தா, “தாக்கூர், ஓபிசி மற்றும் பிராமணர்களின் சமநிலையை பராமரிக்க பிராமணர் என்ற பெயரில் அவர் துணை முதல்வர் ஆக்கப்பட்டார். ஆனால் என் பார்வையில் அவர் ஒரு பிராமணத் தலைவர் அல்ல.” என்று கூறுகிறார்.

உத்தரபிரதேசத்தில் பிராமணர்கள் மக்கள் தொகையில் 12 சதவீதம் உள்ளனர். பத்திரிகையாளர் யோகேஷ் மிஸ்ராவும் மாநில அரசியலில் பிராமண வாக்குகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளார்.

அவர் கூறுகிறார், “ஆசிரியராகவோ அல்லது கதை சொல்பவராகவோ இருக்கும் ஒரு பிராமணர், அவர் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு சமூகத்துடனும் பழகும் வாய்ப்பு பெற்றவர். யார் வீட்டில் எந்தச் சடங்காக இருந்தாலும் அவர்கள் அழைக்கப்படுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் மக்களுடன் மிகவும் நல்ல தொடர்பைக் கொண்டுள்ளார்கள்.”

அகிலேஷ் அரசின் முன்னாள் கேபினட் அமைச்சரும், எம்எல்ஏவுமான மனோஜ் குமார் பாண்டே, பிராமணர்களை சமாஜ்வாதி கட்சியுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பிஜேபியின் பிராமண வியூகம் குறித்து, “பிஜேபி பிராமணர்களுக்காக ஒரு குழுவை அமைத்துள்ளது, இது கவலையில் இருப்பதற்கான அறிகுறியாகும், பிராமணர்கள் பாஜகவை விட்டு வெளியேறுகிறார்கள். பிராமணர்கள் தங்கள் சூழ்நிலைகளை அறிந்திருக்கிறார்கள். அதற்கேற்ப வாக்களிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு எங்கு மரியாதை கிடைக்கும் என்று தான் பார்க்கிறார்கள்.

2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அவர்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாக்களித்தனர். பாஜக பிராமணர்களுக்கான இயல்பான கட்சி அல்ல என்பதை இது நிரூபிக்கிறது. இதே நிலைதான் 2022-லும் நடக்கிறது. பிராமணர்கள் படித்த கல்வியறிவு பெற்ற சமூகம். உத்தர பிரதேசத்தில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் மிக வேகமாக அதிகரித்துள்ளதை உணர்ந்துள்ளனர். பிராமணன் ஆடுகளைப் போல வாக்களிக்க மாட்டான், மாறாக அவன் பணிகளை மதிப்பீடு செய்து வாக்களிக்கிறான். எனவே இந்த அடிப்படையில் அவர்கள் சமாஜவாதி கட்சியில் இணைகிறார்கள் என்பது குறித்துக் கவலைப்பட வேண்டியது அவசியமாகிறது. ” என்று அவர் கூறுகிறார்.

2007 இல், பகுஜன் சமாஜ் கட்சி பிராமணர்கள் மற்றும் தலித்துகளின் சமூகக் கட்டமைப்புச் சூத்திரத்தை அறிந்து, அறுதிப் பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தது. ஆனால், ‘சர்வஜன் ஹிதாய் சர்வஜன் சுகாய்’ அதாவது, ‘அனைவருக்குமான நலன், அனைவருக்குமான சுகம்’ என்ற முழக்கத்துடன் இயங்கும் மாயாவதி, 2007-ம் ஆண்டின் வரலாற்று வெற்றியை மீண்டும் பெறுவது அரிது என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

கட்சியின் பிராமண முகமான சதீஷ் சந்திர மிஸ்ரா பேரணிகளை நடத்துகிறார், ஆனால் மாயாவதி பிரச்சாரம் செய்வதிலும் சாதிகளைச் சேர்ப்பதிலும் பின்தங்கியிருக்கிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தரம்வீர் செளத்ரி கூறும்போது, “மாயாவதி பேரணி நடத்தவில்லை என்று கூறுபவர்கள், அக்டோபர் 9-ம் தேதி லக்னோவில் பிரமாண்ட பேரணி நடத்தியதையும் பகுஜன் சமாஜ் கட்சி 300 இடங்களை உறுதி செய்துள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

பிராமணர் வாக்குகள் குறித்து அவர் கூறும்போது, “2007-ல் 86 பிராமணர்களை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஆக்கியது. அதில் 57 பிராமணர்கள் வெற்றி பெற்று 15 எம்எல்சிகளை உருவாக்கினோம். பிராமணர்களுக்கு இவ்வளவு பெரிய உதவிகளை

எந்தக் கட்சியும் செய்ததில்லை. எங்கள் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் ஒரு பிராமணர். ‘ஜாதி தோடோ சமாஜ் ஜோடோ’ என்று பேசுகிறோம். பிராமணர்கள் ஆதரவுடன் கட்சி வளர்ந்துகொண்டே இருந்தது. ஆனால் இன்று பிராமணர்கள்தான் அதிகமாகத் துன்புறுத்தப்படுகிறார்கள்.இந்த மாநிலத்தில் 70 சதவிகிதம் ஒரே சமூகத்தின் ஆதிக்கம் நிலவுகிறது. அது யோகி ஆதித்யநாத்தின் ராஜ்புத் சமூகம். ” என்கிறார்.

இருப்பினும், உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் பிராமணர்களை பாஜகவுடன் இணைக்கும் பொறுப்பு பாஜகவின் இந்த புதிய பிராமணக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கேள்வி என்னவென்றால், தேர்தலுக்கு முன்பு தொடங்கிய இவ்வளவு பெரிய பிரசாரம் சரியான நேரத்தில் அதன் முடிவை எட்டுமா? என்பது தான். பொறுத்திருந்து பார்ப்போம்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button