மகளை கட்டிக் கொடுக்காததால் ஆத்திரத்தில், அக்கா வீட்டில் மண்ணெண்ணெய் குண்டை வீசிய, கோபக்கார இன்ஜினியர் கைது✍️முழுவிவரம்✍️ விண்மீன்நியூஸ்
மகளை கட்டிக் கொடுக்காததால் ஆத்திரம்: அக்கா வீட்டில் மண்ணெண்ணெய் குண்டை வீசிய இன்ஜினியர் கைது*
மதுரை: மகளை கட்டிக் கொடுக்காத ஆத்திரத்தில், அக்கா வீட்டில் மண்ணெண்ணெய் குண்டை வீசிய இன்ஜினியர் கைதானார். மதுரை அருகே மேலக்காலை சேர்ந்தவர் ராஜா மகன் தீபன் சக்கரவர்த்தி(33). இன்ஜினியரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மதுரை செல்லூர் பகுதியில் இவரது அக்கா வசித்து வருகிறார். இவரது 22 வயதான மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்ட தீபன் சக்கரவர்த்தி, பெற்றோர் மூலம் பெண் கேட்டுள்ளார். 11 வயது வித்தியாசம் இருப்பதாக கூறி, திருமணத்திற்கு பெண் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. ஆத்திரமடைந்த தீபன்சக்கரவர்த்தி நேற்று முன்தினம் சகோதரி வீட்டிற்கு சென்றார்.
அப்போது, வீட்டிலிருந்த இவரது சகோதரி மற்றும் உறவினர்கள், “பெண் விஷயமாக, இனிமேல் இங்கு வரக்கூடாது’’ எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீபன் சக்கரவர்த்தி, மண்ணெண்ணெய் குண்டை வீசி விட்டு தப்பி ஓடினார். பாட்டில் வெடித்து சிதறியதால், அங்கு தீ விபத்து ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து, பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் செல்லூர் போலீசார் வழக்கு பதிந்து, தீபன்சக்கரவர்த்தியை கைது செய்தனர்.