உறவுகள்பயனுள்ள தகவல்

நாம் வெற்றிபெற வேண்டும் என்கிற ஆசையும், நிம்மதியாக வாழ வேண்டும் என்கிற விருப்பமும், பொருளாதார வளர்ச்சியோடு வாழ வேண்டும் என்கிற தேவையும் ஒவ்வொரு நபருக்கும் பொதுவான ஒன்றுதான்✍️வெற்றி நிம்மதி பொருளாதார சுதந்திரம்… ?ஓர் அடிப்படை புரிதல்…✍️முழு கருத்தியல் -விண்மீன்நியூஸ்

advertisement by google

வெற்றி நிம்மதி பொருளாதார சுதந்திரம்…

advertisement by google

ஓர் அடிப்படை புரிதல்…

advertisement by google

நாம் வெற்றிபெற வேண்டும் என்கிற ஆசையும், நிம்மதியாக வாழ வேண்டும் என்கிற விருப்பமும், பொருளாதார வளர்ச்சியோடு வாழ வேண்டும் என்கிற தேவையும் ஒவ்வொரு நபருக்கும் பொதுவான ஒன்றுதான்.

advertisement by google

ஆனால், வெற்றியும், நிம்மதியும், பொருளாதார சுதந்திரமும் பலருக்கும் கிடைத்து விடுவதில்லை. அது சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது.

advertisement by google

ஏனென்றால், அந்த சிலரின் அனுபவத்திற்கும், அந்தப் பலரின் அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு தான் காரணம்.

advertisement by google

அந்த சிலர் சில விடயங்களைப் புரிந்து கொண்டுள்ளனர். அந்த சில விடயங்கள் தான் அவர்களை வெற்றியாளராக, நிம்மதியான நபர்களாக, பொருளாதார சுதந்திரம் அடைந்த நபர்களாக அவர்களை மாற்றி உள்ளது.

advertisement by google

அந்த சிலர் அப்படி என்னதான் புரிந்து வைத்துள்ளனர்?

advertisement by google

வெற்றி, நிம்மதி, பொருளாதாரம் என்பவை என்ன? அவற்றை எப்படி அடைவது என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர் அவ்வளவு தான்.

நாம் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ஆனால், வெற்றி என்பது என்ன என்பதைப் பற்றி நாம் தேடுவதோ, புரிந்துகொள்வதோ இல்லை.

நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம் ஆனால், நிம்மதி என்பது என்ன? நிம்மதியாக வாழ்வது எப்படி? என்பவற்றை பற்றி நாம் உணர்வதே இல்லை.

நாம் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்று என்று பாடுபடுகிறோம் ஆனால், பொருளாதார அடிப்படை அறிவைக்கூட நாம் வளர்த்துக்கொள்வது இல்லை.

இப்போது புரிகிறதா? அந்த சிலருக்கும், பலருக்குமான‌ வேறுபாடுகள்?

நமக்கு ஒன்று வேண்டும் எனில் அதைப்பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படை புரிதல் தான் அதை அடைவதற்கான முதல் படி…

??

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button