போலீசார் யாருக்கெல்லாம் சல்யூட் அடிக்க வேண்டும் என்பது குறித்து காவல் நிலை ஆணை விதிகளில் விளக்கம் வெளியீடு✍️எம்எல்ஏ., எம்பி.,க்களுக்கு நோ போலீஸ் சல்யூட்.!✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
எம்எல்ஏ., எம்பி.,க்களுக்கு நோ போலீஸ் சல்யூட்.!
போலீசார் யாருக்கெல்லாம் சல்யூட் அடிக்க வேண்டும் என்பது குறித்து காவல் நிலை ஆணை விதிகளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், கேபினட் அமைச்சர்கள், நீதிபதிகள், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அவர்களுக்கு மட்டும்தான் போலீஸ் அதிகாரிகள் கட்டாயமாக சல்யூட் அடித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் மட்டுமின்றி காவல்துறையில் தங்களுடைய உயரதிகாரிகளுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்ய வேண்டும் என்றும் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட எஸ்பி – டிஐஜிக்கும்,
டிஐஜி – ஐஜிக்கும்,
ஐஜி – ஏடிஜிபிக்கும்,
ஏடிஜிபி – டிஜிபிக்கும் சல்யூட் அடித்து மரியாதை செய்ய வேண்டும் என்று, காவல் நிலை ஆணை விதிகளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், சாலைகளில் போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்கள் யாருக்கும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று காவல் நிலை ஆணை விதிகளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் போக்குவரத்தைக் கண்காணிக்கும் போது மரியாதை செலுத்துவது கட்டாயமல்ல என்றும், உயர் அதிகாரிகளுக்கும், மற்றவர்களுக்கும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல் நிலை ஆணை விதிகளின் எந்த இடத்திலும், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினருக்கு போலீசார் சல்யூட் அடித்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது கட்டாயம் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.