இந்தியா

ஆந்திராவில் நோய் எதிர்ப்பு அதிகரிப்பதாக கூறி கழுதை இறைச்சி விற்பனை அமோகம்✍️ குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளி, கிருஷ்ணா மாவட்டத்தில் விஜயவாடா மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் கழுதை கறி ,ஒரு கிலோ ₹600க்கு விற்பனை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது எனக்கூறி கழுதை இறைச்சி விற்பனை அமோகம்: ஆந்திராவில் பரபரப்பு

advertisement by google

திருமலை: ஆந்திராவில் நோய் எதிர்ப்பு அதிகரிப்பதாக கூறி கழுதை இறைச்சி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளி, கிருஷ்ணா மாவட்டத்தில் விஜயவாடா மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் கழுதை இறைச்சி ஒரு கிலோ ₹600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கழுதை இறைச்சியை வாங்குவதற்கு கடந்த சில மாதங்களாக அதிகளவில் அசைவப் பிரியர்கள் விரும்புவதால் இந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கழுதை இறைச்சி விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு தற்போது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தெலங்கானாவில் உள்ள ஜஹீராபாத் மற்றும் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இருந்து தாடேப்பள்ளிக்கு கழுதை இறைச்சி அதிகளவில் கொண்டு வரப்படுகிறது.

advertisement by google

கழுதை இறைச்சி ஆஸ்துமா மற்றும் மூட்டுவலி போக்குவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் பரவலாக கூறப்பட்டு வரும் கருத்துக்களால் கழுதை விற்பனை இறைச்சி கடந்த சில மாதங்களாக அமோகமாக நடக்கிறது. கழுதை இறைச்சி சாப்பிடுவதால் உடலுக்கு கெடுதல் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கொரோனா ெபருந்தொற்று காலமான தற்போது கவனமாக இருக்கும்போது, இதுபோன்ற அறிவியல் ஆதாரமற்ற கழுதை இறைச்சியை சாப்பிடுவது சுகாதார பிரச்னைகளுக்கு மேலும் வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button