இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விரைவாக மீள்கிறது சென்னை✍️ 10 நாட்களாக தொடர்ந்து சரியும் புதிய கொரோனா கேஸ்கள்✍️குட்நியூஸ்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மெல்ல மெல்ல மீள்கிறது சென்னை.. 10 நாட்களாக தொடர்ந்து சரியும் புதிய கொரோனா கேஸ்கள்.. குட்நியூஸ்!

advertisement by google

சென்னை: சென்னையில் கடந்த 10 நாட்களாக பதிவாகும் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைத்து வருகிறது.

advertisement by google

தமிழகத்தில் இன்று 34867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 301580 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 1877211 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 404 பேர் பலியாகி உள்ளனர்.

advertisement by google

தமிழகத்தில் மொத்த பாதிப்பு பெரிதாக குறையாத நிலையில் சென்னையில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் குறைந்த வண்ணம் இருக்கின்றன. தினசரி பாதிப்புகள் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.

advertisement by google

சென்னையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக 7000+ கேஸ்கள் பதிவானது. இது மோசமாகும் என்றே கணிக்கப்பட்டது. அதாவது சென்னையில் தினசரி கேஸ்கள் 15 ஆயிரத்தை கூட தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது சென்னையில் கொரோனா கிராப் பெரிய அளவில் சரிந்துள்ளது. கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா கேஸ்கள் சென்னையில் சரிந்து வருகிறது.

advertisement by google

சென்னையில் இத்தனை நாட்கள் பாசிட்டிவிட்டி ரேட் எனப்படும் டிபிஆர் தொடர்ந்து சரிந்து வருகிறது. தினசரி டெஸ்ட் அதிகரிக்கப்பட்டாலும் கூட பாசிட்டிவ் ஆகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதாவது சென்னையில் மொத்தமாக டெஸ்ட் செய்யப்படும் நபர்களில் பாசிட்டிவ் ஆகும் நபர்களின் எண்ணிக்கை பெரிய சரிவை சந்தித்துள்ளது.

advertisement by google

அதிலும் நேற்று வரை சென்னையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக தினசரி கேஸ்கள் பதிவான நிலையில் தற்போது இது 5 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. சென்னையில் இன்று 4985 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 48151 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். சென்னையில் கொரோனா உயரும் விகிதம் -26% ஆக உள்ளது.

advertisement by google

அதே சமயம் ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிக்கும் வீதம் 15% ஆக குறைந்துள்ளது. வெறும் 10 நாட்களில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது சென்னையில் கொரோனா உச்சத்தை கடந்து விட்டது என்பதை உணர்த்துகிறது. இன்னும் 10 நாட்களில் சென்னையில் இது அப்படியே பாதிக்கு பாதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஏற்பட்ட இந்த மாற்றம் கண்டிப்பாக வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களிலும் ஏற்படும். முக்கியமாக செங்கல்பட்டில் ஏற்கனவே தினசரி கேஸ்கள் 2000க்கும் கீழ் குறைய தொடங்கி உள்ளது. கோவையில் மட்டுமே தினசரி கேஸ்கள் 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அங்கும் வரும் வாரங்களில் கேஸ்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button