விஜய், அஜித்னு எல்லாரையும் டவுசரோட சுத்த விட்டுட்டாங்களே.. வைரலாகும் கேரிகேச்சர் போட்டோ டிரெண்ட்!
சென்னை: கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் நடிகர்களை பெண்கள் போலவும் நடிகைகளை ஆண்களை போலவும் ஃபேஸ் மார்பிங் செய்து டிரெண்ட் செய்தனர்.
இந்த ஆண்டு லாக்டவுனில் புதிய டிரெண்டை உருவாக்க நினைத்த நெட்டிசன்கள் பிரபல நடிகர்கள் முதல் வீட்டில் உள்ள குட்டீஸ் முதல் பெருசுகள் வரை எல்லோரையும் கேரிகேச்சர் கார்ட்டூன்களாக மாற்றி வைரலாக்கி உள்ளனர்.
தல அஜித், தளபதி விஜய் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களையும் கேரிகேச்சர்களாக மாற்றி அட்டகாசம் செய்து வருகின்றனர்.
லாக்டவுனில் சும்மா இருக்க முடியாமல் ட்விட்டர் ஸ்பேஸ், கேரிகேச்சர் கார்ட்டூன்கள் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அட்ராசிட்டி செய்து வருகின்றனர். பிரபல நடிகர்களை செம கூல் பாயாக மாற்றி வெறும் டவுசர் சட்டையுடன் கேரிகேச்சர் கார்ட்டூன் கதாபாத்திரங்களாக வடிவமைத்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜாவின் போட்டோவும் இந்த #caricature ஹாஷ்டேக்கில் டிரெண்ட் ஆகி வருகிறது. பிரபலங்களை போலவே ஏகப்பட்ட ரசிகர்களும் தங்களின் போட்டோக்களை இந்த கேரிகேச்சர் போட்டோவாக அப்கள் மூலம் மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இப்படி கேரிகேச்சர் போட்டோக்களை உருவாக்கும் ரசிகர்கள் பிரபலங்களோடு தாங்களும் இருப்பது போல போட்டோக்களை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி உடன் அவர்களது ரசிகர்கள் இருப்பது போல இருக்கும் கேரிகேச்சர் போட்டோவும் வைரலாகி வருகிறது.
பிகில் படத்தில் தென்றலாக நடித்த நடிகை அம்ரிதா நடிகர் கவினின் லிப்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் அந்த படத்திற்காக பாடிய இன்னா மயிலு பாடல் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், நடிகை அம்ரிதாவையும் இப்படி கார்ட்டூன் பொம்மையாக மாற்றி ரசிகர்கள் அழகு பார்த்து வருகின்றனர்.
அஸ்வின், ஷிவாங்கி, புகழ் என ஏகப்பட்ட குக் வித் கோமாளி பிரபலங்களையும் இதுபோன்று கேரிகேச்சர் கார்ட்டூன் பொம்மைகளாக மாற்றி ரசிகர்கள் அழகு பார்த்து வருகின்றனர். ஒரு நாயகன் உதயமாகிறான் என்பது போல ஹீரோ என பதிவிட்டு அஸ்வின் இருக்கும் போட்டோவுக்கு அதிக லைக்குகள் குவிந்து வருகின்றன.
குக் வித் கோமாளிக்கு ஃபேன்ஸ் இருக்காங்கன்னா, பிக் பாஸ் ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? உடனே களத்தில் குவித்த லியா ஆர்மி லாஸ்லியாவை செம க்யூட் கேரிகேச்சராக உருவாக்கி உள்ளனர். எல்லா போட்டோவும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சக்கைப் போடு போடுகிறது.
நடிகர் அஜித்தின் கேரிகேச்சர் போட்டோக்களையும் அஜித் ரசிகர்கள் தங்களது வாட்ஸ் அப்களில் டிபிக்களாகவும், ஸ்டேட்டஸ்களாகவும் வைத்து வருகின்றனர். மேலும், ஏகப்பட்ட வெரைட்டிகளிலும் நடிகர் அஜித்தின் கேரிகேச்சர் போட்டோக்களை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.