மருத்துவம்

தமிழகத்தில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்து தடுப்பூசி தயாரிப்பை தொடங்கிட வேண்டும் என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் அமைச்சரிடம் கோரிக்கை✍️இனி இதெல்லாம் வேலைக்கு ஆகாது… ஸ்ட்ரைட்டா டெல்லிக்கு சென்று அதிரடி காட்டிய டிஆர்.பாலு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

இனி இதெல்லாம் வேலைக்கு ஆகாது… ஸ்ட்ரைட்டா டெல்லிக்கு சென்று அதிரடி காட்டிய டிஆர்.பாலு..!

advertisement by google

செங்கல்பட்டு ஆலையில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்து தடுப்பூசி தயாரிப்பை தொடங்கிட வேண்டும் என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

advertisement by google

செங்கல்பட்டு ஆலையில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்து தடுப்பூசி தயாரிப்பை தொடங்கிட வேண்டும் என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரம் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

advertisement by google

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்;- கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகவேகமாக பரவிவரும் சவாலான நிலையில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக பல்வேறு பணிகளை அதிவேகத்துடன் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் செயல்திட்டத்தை தமிழக அரசு துவக்கி உள்ளது. ஆனால், இதற்காக மத்திய அரசு வெறும் 13.85 லட்சம் ஊசிகளையே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது.

advertisement by google

எனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தனை நேற்று (20.5.2021) மாலை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு உடனடியாக குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றினை அளித்தார்.

advertisement by google

மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனம் ரூபாய் 750 கோடியில் ஊசி தயாரிக்கும் ஆலையை அமைத்துள்ளது. ஆனால், தற்சமயம் இந்த ஆலை தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடாமல் உள்ளது. இங்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய கூடுதலாக ரூபாய் 300 கோடி முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தடுப்பூசி தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக எச்.எல்.எல். ஆலையில் கூடுதல் முதலீடு செய்திட தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

advertisement by google

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் பதில் அளித்திடும் போது, வயது 18 முதல் 44 வயது உடையோருக்கான ஜூன் ஜூலை ஆகிய இரண்டு மாதத்திற்கான தடுப்பூசிகளின் எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு 11 லட்சத்து 51 ஆயிரத்து 760 ஆக இருக்கும் எனவும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஜூன் மாதத்திற்காக 6 லட்சத்து 55 ஆயிரத்து 330 (ஜூன் மாதம் முதல் 15 நாட்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைப்போலவே ஜூன் மாதம் இரண்டு மற்றும் மூன்றாவது வாரங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

advertisement by google

மேலும், செங்கல்பட்டில் அமைந்துள்ள எச்.எல்.எல். தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை புனரமைக்கும் பணியை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் பூர்வாங்கமாக நல்ல முடிவினை மத்திய அரசு மேற்கொள்ளும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் தெரிவிக்குமாறு மத்திய அமைச்சர் திரு. ஹர்ஷ்வர்த்தன் அவர்கள் உறுதி அளித்துடன் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தனது நல்வாழ்த்துகளையும் தெரிவிக்குமாறு டி.ஆர்.பாலுவிடம் கூறினார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button