உலக செய்திகள்உறவுகள்பயனுள்ள தகவல்வரலாறுவிண்மீன் நியூஸ் டிவி

சிங்கம் வாழ்க்கை இத்தனை அதிசயங்களா✍️ இதனை விண்மீன் நியூஸ்(9444433119)ஆராய்ச்சி செய்து தொகுத்து வழங்கியுள்ளது ✍️சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும்✍️ சிங்கம் ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது✍️தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்று பெயர்✍️ குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும், அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்✍️ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும்✍️ பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு✍️ சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது✍️பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும்✍️ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.✍️சிங்கங்கத்தின் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும்✍️ பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும்✍️வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும்✍️ ஓநாய், கழுதைப் புலி முதலானவை எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்று பெயருண்டு. குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.[2] ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.✍️✍️✍️வாழிடமும் இயல்புகளும் தொகு
சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் (ஓநாய், கழுதைப் புலி முதலானவை) எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன.

advertisement by google

நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும். இதனை தன் வட்டத்தில் மலம், மூத்திரம் கழிப்பதன் மூலமும் கர்ஜிப்பது மூலமும் தன் நகத்தால் மரங்களில் கீரியும் இது தன் எல்லை என மற்ற சிங்ககளுக்கும் பெரிய வகை ஊனுண்ணிகளுக்கும் தெரிவிக்கிறது. அவ்வாறு இருக்கையில் அருகில் இரை வரினும் பொதுவாக அவற்றைத் தாக்காது. 1990களில் சிங்கங்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள்.

advertisement by google

சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும். உடற்கூற்றின் படி இரு பாலிங்களும் ஆயுட்காலத்தில் சர்வ வல்லமை படைத்திருந்தாலும், ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அக்குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டு இறக்கவோ அதிக காயத்திற்குள்ளதாகவோ ஆக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தில் இருந்து விரட்டப்படும் போது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால் அதிக ஊட்டம் அளிக்கக் கூடிய கொம்புடைய உயிரிகளையோ மற்ற பெரிய விலங்குகளையோ வேட்டையாட முடியாமல் போகிறது. இத்தனை வலிமை இழந்த சிங்கம் மிகவும் ஒல்லியாகவும் பலவீனமாகவும் இருப்பதால் வேட்டையாடப்படும் எளிய விலங்குகளாலேயே சில சமயங்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும். இதன் காரணத்தாலேயே ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட சராசரி ஆயுட்காலத்தை குறைவாகக் கொண்டுள்ளது.✍️✍️✍️???சிங்கக் கூட்டத்தின் தலைவனோ தலைவியோ கூட்டத்தின் ஒரு அங்கத்தினராகவே இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பொதுவாக ஐந்து ஆறு வயதுவந்த பெண் சிங்கங்களும், ஒரு வயது வந்த ஆணும் சில குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். இந்த அமைப்பில் விதிவிலக்குகள் குறைவாகவே உண்டு✍️✍️✍️???சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இவ்வினத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை, ஆனால் அவற்றின் இனங்களோ வேறுபட்டவையாக உள்ளது. அறியப்பட்ட அனைத்து பூனைகுடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாக சிங்கப்புலி உள்ளது. கிட்டத்தட்ட இவற்றைப்போலவே கலப்பினச்சேர்க்கை மூலம் தோன்றிய புலிச்சிங்கம் எனும் விலங்கில் இருந்து சிங்கப்புலி வேறுபட்டுள்ளது. ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்த கலப்பினமே புலிச்சிங்கம் ஆகும். சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும், அதேவேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும். கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button