கோத்தகிரி கோயில் பூசாரிகளை மாற்றக்கோரி படுக இன மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோத்தகிரி கோயில் பூசாரிகளை மாற்றக்கோரி படுக இன மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்உள்ள புகழ்பெற்ற பெத்தளா ஹெத்தையம்மன் கோயில் பூசாரிகள் 3 பேர் ஊர்மக்களை மதிக்காமல் கோயில் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அவர்களை மாற்றக் கோரியும், கைகாரு சீமைக்கு உட்பட்ட 18 ஊர்களைச் சேர்ந்த படுக இன மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும் குன்னூர் கோட்டாசியர் அறிவுறுத்தியும் இன்னும் பூசாரிகள் மாற்றப்படாமல் உள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கைகாரு சீமைக்கு உட்பட்ட இளிதுரை, எடப்பள்ளி, பெட்டடிஉள்ளிட்ட 18 ஊர்களைச் சேர்ந்த 2,500 வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதுடன் தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைக்க உள்ளதாக 18 ஊர்களின் தலைவர் இரியன் தெரிவித்துள்ளார்.