இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

முதல்வர் வேட்பாளருக்காக அதிமுகவில் விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை கிளைமேக்ஸ் சுபம்? எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளாராகஅறிவித்தார் ஓபிஎஸ்? முழு விவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

முதல்வர் வேட்பாளருக்காக அதிமுகவில் விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை கிளைமேக்ஸ் சுபம்

advertisement by google

அஇஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

advertisement by google

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் வீடுகளில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் விடிய விடிய ஆலோசனை நடத்திய நிலையில் கிளைமேக்ஸ் சுபமாக முடிந்துள்ளது.

advertisement by google

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் களத்தில் அனல் வீச ஆரம்பித்து விட்டது.

advertisement by google

இந்த தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்பது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை.

advertisement by google

ஆனால் முதல்வர் வேட்பாளராக தாமே இருக்க வேண்டும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடாகும்.

advertisement by google

மாறி மாறி ஆலோசனைமுதல்வர் வேட்பாளர் தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதிமுகவில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

advertisement by google

மாறி மாறி பேசி வருவதால் தொண்டர்கள் இடையேயும் சர்ச்சையும் குழப்பமும் நீடித்தது. மூன்று நாட்கள் தேனியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம்.

அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனைஅதே போல சென்னையில் தனது ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. உச்சக்கட்டமாக நேற்று காலை முதல் அமைச்சர்களும், கட்சியின் நிர்வாகிகளும் முதல்வர், துணைமுதல்வர் வீடுகளுக்கு சென்று மாறி மாறி ஆலோசனை நடத்தினர்

10 மணிக்கு நல்ல செய்திஇந்த ஆலோசனை நள்ளிரவு தாண்டியும் நீடித்தது. அமைச்சர்களும் நிர்வாகிகளும் விடிய விடிய ஆலோசனை நடத்திய நிலையில் அதிகாலை 3.30 மணிக்கு ஆலோசனை நிறைவடைந்துள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் காலை 10 மணிக்கு நல்ல செய்தி வெளியாகும் என்று கூறி விட்டு சென்றார்.11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவைத்திலிங்கம் சொன்னது போலவே அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது

அந்த குழுவில் அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடம் பெற்றுள்ளனர். வழிகாட்டுதல் குழுவில் உள்ளவர்களின் பெயர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

ஓபிஎஸ் அறிவிப்புஇதனைத் தொடர்ந்து அதிமுகவின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம். இதன் மூலம் கடந்த சில மாதங்களாக கட்சியில் நீடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை சந்திக்க தயாரான அதிமுகவிடிய விடிய நடந்த ஆலோசனையின் கிளைமேக்ஸ் சுபமாக முடிந்துள்ளது.

செயற்குழு கூட்டத்தில் சொன்னபடி சொன்ன தேதியில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டதை அடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது அதிமுக.

advertisement by google

Related Articles

Back to top button