நான் கீழே தள்ளிவிடப்பட்டது பெரியவிஷயமல்ல? ஒட்டுமொத்த நாடும், மக்களும் அடித்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளனர் – ராகுல்காந்தி அதிரடி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
நான் கீழே தள்ளிவிடப்பட்டது பெரியவிஷயமல்ல: ராகுல்
ஒட்டுமொத்த நாடும், மக்களும் அடித்து கீழே தள்ளிவிடப்படுகின்றனர். அதில், நான் கீழே தள்ளிவிடப்பட்டது பெரியவிஷயமல்ல. நாட்டை காப்பது நமது கடமை. விவசாயிகளுக்கு நாம் துணை நிற்க வேண்டும். நாம் அரசுக்கு எதிராக போராடினால், கீழே தள்ளிவிடப்படுவோம். தடி கொண்டு தாக்கப்படுவோம். அதுதான் இந்த அரசு.
உண்மையாக கீழே தள்ளிவிடப்பட்டதை உணர்ந்தவர் யாரென்றால், இளம்பெண்ணின் குடும்பத்தினர் தான். பெண் குழந்தை வைத்துள்ளவர்கள் இதனை உணர்ந்திருப்பார்கள். உங்களுக்கு பெண் குழந்தைகள் இல்லையென்றாலும், ஹத்ராஸ் விவகாரத்தில், கொலைக்கான நோக்கத்தை புரிந்து கொள்ளலாம். அவர்கள் இந்த போராட்டத்தில் தனித்து விடப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தவே விரும்பினேன். தினமும் ஏதோ விதங்களில் ஆண்களால் வன்கொடுமைகளை அனுபவிக்கும் லட்சகணக்கான பெண்கள் பக்கம் நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை தெரிவிக்க விரும்பினேன். இவ்வாறு அவர் கூறினார்.