இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

advertisement by google

படைப்புழுக்களால் தாக்கப்பட்ட மக்காச்சோளப் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

advertisement by google

2018-19ஆம் ஆண்டுகளில் படைப்புழு தாக்குதலால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களுக்கு தமிழக அரசு வழங்கிய நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு முறையாக சென்றடையவில்லை. கோவில்பட்டி வட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை முறையாக தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை என்றும், விவசாயிகள் இல்லாதவர்களும் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். இதனால், படைப்புழு தாக்குதல்களால் நிவாரணத் தொகை பெற்ற விவசாயிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.நிவாரணத் தொகை முறையாக அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கோவில்பட்டி வட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகை எவ்வளவு என்பதையும் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலர் சீனிராஜ், மாநிலத் துணைத் தலைவர் நம்பிராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் ராஜேந்திரன், தலைவர் நடராஜன், துணைத் தலைவர் சாமியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் ஆர்ப்பாட்டக் குழுவினர் கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button