இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்மருத்துவம்

Eசிகரெட்க்கு தடை நிர்மலா சீதாராமன் பரபரப்பு பேச்சு

advertisement by google

??விண்மீன்நியூஸ்: ?⚪இ – சிகரெட்டுக்கு தடை விதிக்கப்படும் :

advertisement by google

இ- சிகரெட் ஏற்றுமதி, இறக்குமதி, தயாரிப்புக்கும் தடை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

advertisement by google

இ-சிகரெட்டால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுவதால் தடை விதிக்கப்படுகிறது – நிர்மலா சீதாராமன்..

advertisement by google

மாணவர்கள், இ-சிகரெட் பயன்படுத்துவது 77 சதவீதம் அதிகரித்துள்ளது – நிர்மலா சீதாராமன்..
??விண்மீன்நியூஸ்???

advertisement by google

இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது. ஈ சிகரெட் என்பது என்ன? அதனால் ஏற்படும் தீங்குகள் யாவை?

advertisement by google

இ-சிகரெட்டுகள் – என்பவை எலக்ட்ரானிக் சிகரெட்டுகள், இவை நெருப்பு இல்லாமல் புகையை உற்பத்தி செய்யக் கூடியவை. இ-சிகரெட்டுகள் மூலம் புகைப்பது ஆங்கிலத்தில் ‘வாப்பிங்’ என்று அழைக்கப்படுகின்றது. இ-சிகரெட்டுகள் முதலில் சிகரெட்டுக்கு மாற்றானவையாகவும், உடல் நலத்தைப் பாதிக்காதவையாகவும் கருதப்பட்டன, ஆனால் பின்வந்த ஆய்வுகள் இ-சிகரெட்டால் ஏற்படும் தீமையானது பிற புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இணையாகவோ அதிகமாகவோ உள்ளதாகக் கண்டறிந்தன.இதனால் தமிழக அரசு தமிழகத்தில் இ-சிகரெட் உள்ளிட்ட புகையிலை மாற்றுப் பொருட்கள் தடை செய்யப்படுவதாக கடந்த 2018 ஜூனில் அறிவித்தது, அதே ஆண்டு செப்டம்பரில் இதற்கான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.தமிழக அரசைப் போலவே மத்திய அரசும் இ-சிகரெட்டுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் ஒரு அங்கமாக, இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட மாற்று புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு மாநில போதைப்பொருள் தடுப்புத்துறைக்கு மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்புத்துறை இவ்வாண்டு மார்ச் மாதம் கடிதம் எழுதியது.கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்தில் இ-சிகரெட்டால் முதல் நபர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்தது. நேற்று 7ஆவது நபரின் இ-சிகரெட் உயிரிழப்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது. உலகெங்கும் ஆயிரக் கணக்கானோர் இ-சிகரெட்டுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படித் தொடரும் உயிரிழப்புகள் மற்றும் உடல்நலக் கோளாறுகளால் பல்வேறு உலக நாடுகளும் இ-சிகரெட்டை தடை செய்ய ஆலோசித்து வருகின்றன.\r\n\r\nஇந்நிலையில் இன்று இந்திய அமைச்சரவை இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்க முடிவெடுத்து உள்ளது. இதனால் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது, வாங்குவது, விற்பது, ஏற்றுமதி இறக்குமதி செய்வது, இடம் மாற்றுவது, இ-சிகரெட்டுகள் குறித்து விளம்பரம் செய்வது – ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட உள்ளன. இந்திய அரசின் இந்த முடிவு பல கோடி இந்தியர்களின் உடல் நலனை பாதுகாப்பதாக அமைந்து உள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button