ஒத்த போட்டோவை ட்விட்டரில் போட்டு மொத்த பேரையும் தெறிக்க வைத்த அமைச்சர் ஜெயக்குமார்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
நம்ம அமைச்சரா இது?
ஒத்த போட்டோவை வெளியிட்டு மொத்த பேரையும் தெறிக்க விட்டு..
செம.. செம!
நம்ம அமைச்சரா இது” என்று பார்ப்பவர்கள் எல்லாரும் வாயை பிளக்கிறார்கள்…….
அப்படி ஒரு போட்டோவை ட்விட்டரில் போட்டு எல்லாரையும் திக்குமுக்காட வைத்து வருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்!!!!!!!
அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை சீரியஸ் &; கலகலப்பு கலந்த மனிதர்……..
வெகு இயல்பாக பழகுவார்..
எப்போதுமே கேஷூவல் பேச்சுதான்..
துளியும் கெத்து இருக்காது..
அதே சமயம் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் என்றால் சீரியஸ் ஆகிவிடுவார்..
புள்ளி விவரத்துடன் எடுத்து வைத்து பாயின்ட் பாயின்ட்டாக பேசுவார்!
அதேபோல, எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டே இருப்பார்..
தீவிரமான கலைப்பிரியரும்கூட..
திடீரென மைக் பிடித்து பாடுவார்..
திடீரென்று ஹைக்கூ எழுதுவார்..
கிரிக்கெட் விளையாடுவார்.. சைக்கிளிங் செய்வார்.. இப்படித்தான் 2 வருஷத்துக்கு முன்பு சென்னையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஆளில்லா விமானம் எனப்படும் டிரோன் டாக்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
டிரோன்அதில் ஆர்வமுடன் ஏறி உட்கார்ந்து கொண்ட ஜெயக்குமார், அதன் கதவையும் சாத்தி கொண்டு… அந்த விமானத்தையே சுற்றுமுற்றும் பார்த்தார்..
பிறகு அந்த விமானம் தயாரிக்கப்பட்ட விதத்தை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார்.
அப்போதுதான் அது நடிகர் அஜீத் தயாரித்தது என்று தெரியவந்தது. உடனே அமைச்சர், “அஜீத் என்ன இவ்வளவு திறமைசாலியா இருக்கிறாரே” என்று ஆச்சரியப்பட்டார்.
நம்பிக்கைகடைசிவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் என்பதும், பச்சையப்பன் காலேஜிலும், சென்னை சட்டக்கல்லூரியிலும் படித்தவர் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும் என்றாலும், இவர் ஸ்கூல் படித்தபோது எப்படி இருந்தார், என்ன செய்தார் என்பது யாரும் அவ்வளவாக அறியாதது
வைரல்அந்த வகையில், இப்போது ஒரு போட்டோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்…
அவர் ஸ்கூல் படிக்கும்போது எடுத்த போட்டோவாம் இது.. பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுத்த போட்டோவை வெளியிட்டு, “பள்ளியில் பளு தூக்கும் போட்டியில் பங்கு கொண்டபோது. #நினைவுகள் #உடல்பலமே மனபலம்” என்று அதற்கு ஒரு கேப்ஷனும் தந்துள்ளார்.
ஸ்வீட் ஷாக்பிளாக் &; ஒயிட்டில் இருக்கிறது அந்த போட்டோ.. நிஜமாகவே கையில் பளு தூக்கி கொண்டு நிற்கிறார்…
தலையில் அப்போதும் முடி குறைவாகவே காணப்படுகிறது.. ஆனால், இவர் பளு தூக்குவதை பார்த்த எல்லாரும், “நம்ம அமைச்சரா இது” என ஸ்வீட் ஷாக் ஆகி வருகின்றனர்.
சூப்பர் ஸார்..இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகியும் வருகிறது..
இதை பார்த்த ட்விட்டர்வாசிகள், “சார்.. பேசாம நீங்க பளுதூக்கும் போட்டிக்கே போயிருக்கலாம்! இந்தியருக்கு ஒரு தங்கம் ஆச்சும் கிடைச்சிருக்கும்!!” என்றும், “செம சார்.. கலக்கறீங்க” என்றும் பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்கள்.