இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி காவல்துறையினருக்கு மனஅழுத்த மேலாண்மை பயிற்சி – எஸ்பி ஜெயக்குமார்துவக்கி வைத்தார் ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி காவல்துறையினருக்கு மனஅழுத்த மேலாண்மை பயிற்சி – எஸ்பி துவக்கி வைத்தார்

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் எதிர்கொள்வது குறித்தும், மன அழுத்த மேலாண்மை குறித்தும் காவல்துறையினருக்கு ஒரு நாள் ‘நிகழ்நிலை” ( Online Training) பயிற்சியை இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

advertisement by google

✍தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் வரை கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் எதிர்கொள்வது குறித்தும், மன அழுத்த மேலாண்மை குறித்தும் பல்வேறு பயிற்சிகள் காவல்துறையினர் அனைவருக்கும் ஒரு நாள் ‘நிகழ்நிலை” (Online Training) பயிற்சியிளிப்பதற்கு சென்னை, காவல்துறை இயக்குநர் (பயிற்சி) அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவலர்கள் முதல் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் வரை ஒரு மையத்தில் 30 பேர்கள் என 6 மையங்களில் ஒரு நாளைக்கு மொத்தம் 180 பேர் வீதம் இன்று (03.08.2020) முதல் 30 நாட்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர்களுக்கு இந்த ஒரு நாள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக தனிப்பிரிவு, ஆயுதப்படை மற்றும் மணியாச்சி உட்கோட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினர் மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கிலும், தூத்துக்குடி உட்கோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலும், தூத்துக்குடி ஊரகம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு சாயர்புரம் போப்ஸ் கல்லூரியிலும், அதே போன்று திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் உள்ளவர்களுக்கு திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி மையத்திலும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் உள்ளவர்களுக்கு கோவில்பட்டி வேல் மேல் நிலைப்பள்ளியிலும் மற்றும் விளாத்திக்குளம் உட்கோட்டத்தில் உள்ளவர்களுக்கு எட்டயாபுரம் ராஜா மேல் நிலைப்பள்ளியிலும் ஆகிய 6 மையங்களிலும் இன்று முதல் இந்த ஒரு நாள் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

✍இந்த ஆன்லைன் பயிற்சி சென்னை மன நல மருத்துவர்கள் டாக்டர் கண்ணன், டாக்டர் சித்ரா அரவிந்தன், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் சித்தனாதன், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, ஓய்வு பெற்ற கூடுதல் கண்காணிப்பாளர் பரந்தாமன், சென்னை போலீஸ் அகாடமயின் (TNPA) துணை கண்காணிப்பாளர் லெட்சுமி காந்தன், அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நாகராஜன், ஆத்மரஞ்சன் யோகவித்யாலயாவிலிருந்து பிரகாஷ், சென்னை மனவளக்கலை மன்றத்திலிருந்து சிவக்குமார், பிசியோதெரபிஸ்ட் டாக்டர் திரு. ரவி சாமுவேல் ஆகிய அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (03.08.2020) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று துவக்கி வைத்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button