பயனுள்ள தகவல்மருத்துவம்

சர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா? ஒரே குழப்பமா இருக்கா… அப்ப இத படிங்க?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

உடல் நலம்…

advertisement by google

சர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா? ஒரே குழப்பமா இருக்கா… அப்ப இத படிங்க…

advertisement by google

சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்வது உடலுக்கு ரொம்ப நல்லது. இதை பெரும்பாலானோர் நிறைய பேர் சொல்லி தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், எந்த வகையில் இது உடலுக்கு நல்லது. சர்க்கரையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இதில் அப்படி என்ன இருக்கிறது? இவை அனைத்துமே அனைவரது மனதிலும் ஓடக் கூடிய சில அடிப்படை சந்தேகங்கள். இவற்றிற்கான விடையை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

advertisement by google

சர்க்கரை மற்றும் வெல்லம், இரண்டுமே கரும்பில் இருந்து தயாரிக்கப்படக் கூடியவை தான். ஆனால், வெல்லத்தை எடுத்துக் கொண்டால், அதில் எந்தவொரு எதிர்வினைகளும் இல்லை. குறிப்பாக, கெமிக்கல் எதுவும் இல்லாத ஒன்று. இருந்தாலும், வெல்லத்திலும் கலோரிகள் இருகின்றன.

advertisement by google

வெல்லமானது, கரும்பில் இருந்து நேரடியாக எடுக்கக் கூடியது. அதனால் தான் அது சற்று அடர் நிறத்தை பெற்றுள்ளது. அதுவே, சர்க்கரை எடுத்துக் கொண்டால், பதப்படுத்தப்பட்டு, வெண்மை நிறம் கொண்டு வர ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

advertisement by google

ஊட்டச்சத்து நிபுணர் கூற்று…

advertisement by google

சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரும், யூடியூபருமான “கௌரவ் தனேஜா” கூறுவது என்றவென்றால், வெல்லமானது, நமது உடலை நச்சு பொருட்களிடம் இருந்து காத்து, சளி மற்றும் இருமல் தொல்லை நெருங்காமல் பாதுகாக்கும். அது மட்டுமல்லாது, உடலில் இரும்புச்சத்தை சமன்படுத்த உதவும். மிக முக்கியமாக, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கூட குறிப்பிட்ட அளவு இதனை சேர்த்துக் கொள்ளலாம். வெல்லம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதுவே, சர்க்கரையில் கொழுப்பு கலோரிகள் உள்ளதால் அவை உடல் எடையை அதிகரிக்க செய்து விடும்.

வெல்லம், சர்க்கரை இரண்டிலுமே கலோரிகள் இருந்தாலும், வெல்லம் தான் இயற்கை முறையிலான சர்க்கரையாகும். சர்க்கரை, வெல்லம், இரண்டில் எதை அதிகமாக சாப்பிட்டாலும், உடல் எடை அதிகரித்து விடும் என்பதை மட்டும் மறக்க வேண்டாம். ஆனால், வெல்லத்தில் ரசாயனங்கள் எதுவும் இல்லாததால், உடலுக்குள் வேறு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே,ஒட்டு மொத்தமான வெல்லம் உடலுக்கு நன்மை தான், அதுவும் சரியான அளவில் சேர்த்துக் கொள்ளும் போது மட்டும் தான். ஏனென்றால், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.

எவ்வளவு வெல்லம் உட்கொள்ளலாம்?

வெல்லத்தில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், குடலுக்கு வலுசேர்க்க உதவும். ஒவ்வொரு 10 கிராம் வெல்லத்தில், சுமார் 16 மி.கி. அளவிற்கு மக்னீசியம் உள்ளது. இது தினசரி உடலுக்கு தேவையான தாதுக்களில் 4 சதவிகிதம் ஆகும். நிறைய வல்லுநர்கள் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், ஒரு ஆரோக்கியமான மனிதர், நாளொன்றிற்கு 25 கிராமிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளவே கூடாது. சிறந்த அளவு என்னவென்றால், 10 முதல் 15 கிராம் வரை தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதம் கூறுவது…

ஆயுர்வேதத்தின் அடிப்படையில், நீரிழிவு நோய் உள்ளவர்கள், 5 கிராம் வரையில் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். உடல் நலக்குறைவு உள்ளவர்கள், புதிதாக எதை உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பும் உங்களது மருத்துவரின் அறிவுரையையும், அனுமதியையும் பெறுவது சிறந்தது. முக்கியமான ஒன்று, உபயோகிக்கும் வெல்லத்தின் தரம். வெல்லம் வாங்கும் போது கலப்படமில்லாத சுத்தமான வெல்லத்தையே தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

வெல்லத்தின் நன்மைகள்…

#1 எளிய முறையில் தயாரிக்கப்படுவதால் வெல்லத்தில் இயற்கை சத்துக்கள் அதிலேயே தக்க வைக்கப்படுகின்றன. அதனால் தான், சர்க்கரையுடன் ஒப்பிடும் போது வெல்லமானது உடலுக்கு ஆரோக்கியம்.

#2 வெல்லம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து, இரத்த அழுத்தம் போன்ற பல வகையில் உதவக் கூடியது. இதுவே, சர்க்கரையை எடுத்துக் கொண்டால் அது வெறும் இனிப்பு சுவையை தருவது மட்டும் தான்.

#3 இப்போது வரை தெரிந்து கொண்ட அனைத்தையும் வைத்து பார்க்கும் போது, வெல்லம், சர்க்கரையில் இரண்டிலுமே ஒரே அளவிலான கலோரிகள் தான் உள்ளன. இரண்டை சாப்பிடுவதன் மூலமாகவும் உடல் எடை அதிகரிக்கத் தான் செய்யும். இருப்பினும், சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கக் கூடும்.

#4 இறுதியாக கூறுவது என்னவென்றால், குடிக்கும் டீ அல்லது காபியில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்துக் கொள்வது சிறந்தது தான். ஆனாலும், உட்கொள்ளும் வெல்லத்தின் அளவை கவனிக்க வேண்டியது அவசியம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button