பயனுள்ள தகவல்

ஐந்தறிவும் ஆறறிவும்? முன்னொரு காலத்தில் லண்டனில் உள்ள சர்க்கஸ் கம்பெனியில் BOZO என்று பெயரிடப்பட்ட யானை ஒன்றின் கதை?முழுக்கதை -விண்மீன்நியூஸ்

advertisement by google

சிந்தனைக் கதை

advertisement by google

ஐந்தறிவும் ஆறறிவும்.

advertisement by google

முன்னொரு காலத்தில் லண்டனில் உள்ள சர்க்கஸ் கம்பெனியில் BOZO என்று பெயரிப்பட்ட யானை ஒன்று புதிதாக வரவழைக்கப்பட்டது. யானை வரவால் சர்க்கஸ்சில் கூட்டம் அலைமோதி பண வசூல் குவிந்தது. ஆனால் ஒருசில நாளில் யானை முரண்டு பிடித்தது. அது பாகனை பலமுறை கொல்ல முயற்சித்தது.

advertisement by google

தன் கூண்டுக்கு அருகில் பார்க்க வரும் குழந்தைகளைக் கொல்ல முயன்றது. யாருக்கும் அது கட்டுப்படவில்லை. இனி இந்த யானையால் பலர் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் சர்க்கஸ் முதலாளி Bozo வை கொல்ல உத்தரவிட்டார். அதற்காக நாள் முடிவு செய்யப்பட்டு அதைப் பார்க்க 2 மடங்கு டிக்கட் அதிகரிக்கப்பட்டது.
குறிப்பிட்ட நாளில் யானை கொல்வதைப் பார்க்க டிக்கட் வாங்கிய கூட்டத்தால் அரங்கு நிரம்பியது. சர்க்கஸ் மானேஜர் அதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். யானையைக் கொல்ல நவீன துப்பாக்கி தயாராக வைக்கப்பட்டிருந்து.

advertisement by google

அப்போது மானேஜரிடம் தலையில் தொப்பி அணிந்த நபர் ஒருவர் வந்து “யானையைக் கொல்வது தவறு என சொன்னார்” மானேஜர் யானை கதையைப் பற்றி சொன்னார். திரும்பியும் தொப்பி போட்டவர் கொல்வது தவறு என வாதிட்டார். யானையை நான் சரிபடுத்துகிறேன் என்றார். நீண்ட இழுபறி பேச்சுக்கு பின்னர், மானேஜர் சம்மதித்தார். ஆனால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நானே பொறுப்பு அதற்கு சர்க்கஸ் நிர்வாகம் பொறுப்பல்ல எனக் கையொழுத்திட்டு கொடுங்கள் என்றார். தொப்பிக்காரர் கையெழுத்திட்டு கொடுத்து விட்டு யானையை எங்கு வாங்கினீர்கள் என்றார்.

advertisement by google

“இந்தியாவில் ராஜஸ்தானில் என்றார்.
தொப்பியையும் கோட்டையும் மேசையில் கழற்றி வைத்து விட்டு அந்த மனிதர் யானைக்கூண்டு அருகில் சென்றார். யானை படுபயங்கரமாக பிளிறிக்கொண்டு அவரைக் கொல்ல முயன்றது. கூட்டம் அவரைப் போக வேண்டாம் எனக் கூச்சலிட்டது. ஆனால் அந்த மனிதர் அதைப் பொருட்படுத்தாமல் யானையிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் கழித்து யானை பிளிறுவதை நிறுத்தியது. இப்போது அவர் கூண்டை திறந்து கொண்டு யானைக்கு பக்கத்தில் சென்றார். மக்கள் அலறினர்.ஆனால் யானையிடம் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இப்போது யானை கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது, தலையை இருபக்கமும் ஆட்டிக் கொண்டே அந்த மனிதர் அருகில் வந்தது.

advertisement by google

திடீரென யானை அந்த மனிதனை தன் தும்பிக்கையால் தூக்கிக் கொண்டு கூண்டை மகிழ்ச்சியாக வலம் வந்தது. ஒட்டு மொத்தக் கூட்டமும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்து ஆர்ப்பரித்தது. இப்போது அந்த மனிதர் யானையிடம் பேசிக்கொண்டு சில நிமிடம் கழித்து வெளியே வந்தார்.

advertisement by google

இப்போது அவர் சர்க்கஸ் மேனேஜரிடம் வந்து” இந்த யானை இந்திமொழியால் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. அதனிடம் ஆங்கில மொழியில் கட்டளை இட்டதால் அதற்குப் புரியவில்லை. அதனால் அது வெறி கொண்டு அலைகிறது. எனவே நீங்கள் யானைக்கு தெரிந்த மொழியான இந்தி பேசும் ஒரு பாகனை வேலைக்கு அமர்த்துங்கள்.

அப்போது தான் அது கட்டுப்படும்” அதனிடம் ஆங்கிலத்தை திணிக்காதீர்கள். எனச் சொல்லி தொப்பியையும் ஃகோட்டையும் எடுத்துக் கொண்டு விடைபெற்று சென்றார்.

??விண்மீன்நியூஸ் கதையின் நேரம்??

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button