இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மூன்றாவதாகதிருமணம் செய்த வனிதா விஜயகுமாருக்கு சிக்கல்?பீட்டரின் முதல் மனைவி போலீஸில் புகார் கொடுத்ததால் பரபரப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பீட்டரின் முதல் மனைவி போலீசில் புகார்: திருமணமான மறுநாளே வனிதா விஜயகுமாருக்கு

advertisement by google

சென்னை:கணவர் பீட்டரின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளதால், திருமணமான மறுநாளே வனிதா விஜயகுமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

advertisement by google

கடந்த 1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகப் புகழை அடைந்தார்.

advertisement by google

நடிகர் ஆகாஷை முதலில் திருமணம் செய்த வனிதா, 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். ஆனந்த் ராஜனை 2007-ல் திருமணம் செய்தார் வனிதா. பிறகு 2012-ல் ஆனந்த் ராஜனையும் வனிதா விவாகரத்து செய்தார். வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனும் ஜோவிதா, ஜெய்நிதா என்கிற இரு மகள்களும் உள்ளார்கள். மகன் ஸ்ரீஹரி ஆகாஷுடனும் இரு மகள்கள் வனிதாவுடனும் வசித்து வருகிறார்கள்

advertisement by google

இந்நிலையில் பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை சனிக்கிழமையன்று திருமணம் செய்துள்ளார் வனிதா விஜயகுமார். சென்னை போரூரில் உள்ள வனிதாவின் இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி இத்திருமணம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட திருமணத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.

advertisement by google

இந்நிலையில் கணவர் பீட்டரின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளதால், திருமணமான மறுநாளே வனிதா விஜயகுமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

advertisement by google

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன். இவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல், அவர் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

advertisement by google

கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளதாகவும், முறையாக விவாகரத்து அளித்த பின்னரே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் தான் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக திருமணமான மறுநாளே வனிதா விஜயகுமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button