வங்கிகளில் மட்டும் ஏசி இயக்கலாமா? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
வங்கிகளில் மட்டும் ஏசி இயக்கலாமா?
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், பெரிய கடைகளில், குளிர்சாதன இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது என்பதும் அடக்கம்.
இந்த கட்டுப்பாடு முறையாக செயல்படுகிறதா என, காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள், வருவாய் துறையினர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ‘ஏசி’ வைக்கப்பட்டுள்ள கடைகளில், அடிக்கடி ஆய்வு செய்கின்றனர்.
ஆனால், வங்கிகளில் மட்டும் இந்த கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரத்தில், 30-க்கும் மேற்பட்ட வங்கிகளில், ‘ஏசி’ இயக்கப்படுவதால், அங்கு வரும் பொதுமக்களில் யாரேனும் ஒருவருக்கு இருந்தாலும், ‘ஏசி’ மூலம், மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.வங்கிகளில் குளிர்சாதன இயந்திரத்தை பயன்படுத்தாமல் தவிர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.