இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அழகான கல்வான் பள்ளத்தாக்கு பெயர் எப்படி வந்தது என்பதே ஒரு ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யமான வரலாறு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

கால்வான் பெயர் எப்படி வந்தது தெரியுமா ஆச்சரியமூட்டும் வரலாறு

advertisement by google

இந்தியா சீனா வீரர்கள் இடையே கடந்த வாரம் மோதல் நிகழ்ந்த இடம் கல்வான் பள்ளத்தாக்கு.

advertisement by google

இந்த மோதலில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்

advertisement by google

இந்தியா சீனா எல்லைப்பிரச்சினை அரை நூற்றாண்டுகாலமாகவே இருக்கிறது. பங்காளி சண்டை இப்போது பெரும் பகையாக மாறி கனன்று கொண்டிருக்கிறது.

advertisement by google

அழகான கல்வான் பள்ளத்தாக்கு பெயர் எப்படி வந்தது என்பதே ஒரு சுவாரஸ்யம்தான்..

advertisement by google

இந்த சுவாரஸ்ய தகவலை கூறியிருப்பவர் வேறுயாருமல்ல இந்த இடத்தை கண்டுபிடித்தவரின் பேரன்தான்.

advertisement by google

கல்வான் என்றால் காஷ்மீரி மொழியில் கொள்ளைக்காரன் என்றும் சிலரோ குடும்பப் பெயராக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஒரு சிலரோ கல்வான் என்றால் குதிரை பராமரிப்பாளர் என்று சொல்கின்றனர்.

கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள கல்வான் ஆற்றை முதன் முதலாக கண்டறிந்தவர் குலாம் ரசூல் கல்வான் என்பவராம்.

1892ஆம் ஆண்டுதான் இந்த இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கினையும் ஆற்றினையும் பாதையையும் கண்டுபிடித்திருகிறார்.

இவர் ஒரு சாகசக்காரர் ஆய்வாளரும் கூட.கொரில்லா தாக்குதல் படை.. லடாக்கில் களமிறக்கப்பட்ட “”.. இந்தியா அதிரடி திட்டம்!கல்வான் பெயர் காரணம்

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த குலாம் ரசூல் கல்வான், இங்கிலாந்து, ரஷ்யா மலையேற்ற குழுவினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பகுதியை சுற்றி காட்டுவாராம்

அப்படி ஒருமுறை இந்த பள்ளத்தாக்கு பகுதிகளிலும் மலைப்பகுதிக்கும் வந்தபோதுதான் இந்த ஆறு ஓடுவதை கண்டுபிடித்திருக்கிறார்.

உள்ளூர்காரரான குலாம் ரசூல் கல்வான் கண்டுபிடித்த ஆற்றுக்கு அவரது பெயரையே வைத்து விட்டார்கள்.

கல்வான் பள்ளத்தாக்குஎப்போதுமே ஒரு இடத்தை கண்டுபிடித்தால் அந்த இடத்திற்கு ஆங்கிலேயர்களின் பெயர்களைத்தான் வைப்பார்கள்

இந்த முறைதான் அதிசயமாக ஆற்றின் பெயருக்கு குலாம் ரசூல் கல்வான் பெயரை வைத்து விட்டார்கள்.

பாதையின் பெயர்டன்மோர் தலைமையிலான இங்கிலாந்து மலையேற்றக்குழுவினர் பள்ளத்தாக்கில் சிக்கியிருந்த போது குலாம் ரசூல் கல்வான் எளிதாக பாதையை கண்டுபிடித்து அவர்கள் தப்பிக்க உதவினாராம்.

இதனையடுத்து அந்த பாதைக்கும் ஆற்றுக்கும் கல்வான் நுல்லா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்
இது நடந்தது 1895ஆம் ஆண்டு.பெருமை கூறும் பேரன் கல்வான்குலாம் ரசூல் கல்வான் பற்றி சர்வண்ட் ஆஃப் சாஹிப் என்ற பெயரில் புத்தகமே எழுதியிருக்கிறார்களாம்.

அந்த புத்தகத்தில் குலாம் ரசூல் கல்வான் ரொம்ப நேர்மையானவர் என்று எழுதியிருக்கிறார்களாம்.

குலாம் ரசூல் கல்வான் பெருமையை அவரது பேரன் முகமது அமீன் கல்வான் பெருமையோடு கூறியிருக்கிறார்.1962 எல்லைப்பிரச்சினை போர்கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உயிர்தியாகம் செய்த நமது ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் வைத்துள்ளார் முகமது அமீன் கல்வான்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லைப்பிரச்சினை கடந்த பல ஆண்டுகாலமாகவே நடந்து வருகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 1962ஆம் ஆண்டு முதன் முதலாக இதே கல்வான் பகுதியில்தான் நமது ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் போர் நடைபெற்றது. இப்போதும் இதே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்தான் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button