இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

சீர்காலியில் சுடுகாட்டுக்கு பாதை இல்லை? இறந்தவர்களின் சடலத்தை வயலில் இருக்கி தூக்கி செல்லும் அவலம் ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சீர்காழி அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லை: இறந்தவர் சடலத்தை வயலில் இறங்கி தூக்கி செல்லும் அவலம்

advertisement by google

சீர்காழி அருகே சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயலுக்குள் இறங்கி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் மருதங்குடி ஊராட்சியில் ஐவேலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் உயிரிழந்தால் 1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள உப்பனாற்றின் கரையில் அடக்கம் செய்வது வழக்கம். இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் வயலில் இறங்கி இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஐவேலி கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்

advertisement by google

அவரது உடலை எடுத்து செல்லும்போது நடவு செய்திருந்த வயலில் இறங்கி, அப்பகுதி மக்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button