இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விளையாட்டு

இரவுநேர விரிவான செய்திகள்(15.9.2019) தமிழகம் முதல் உலகம் வரை

advertisement by google

??விண்மீண்நியூஸ்?? ?? இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

advertisement by google

தர்மசாலா: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. தர்மசாலாவில் தொடர்ந்து ஏழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத சூழல் காரணமாக கைவிடப்பட்டது.

advertisement by google

?winmeennews.com?ஊடகதளம்
[9/15, 9:00 PM] விண்மீண்நியூஸ்2: ?? பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்

advertisement by google

சென்னை: சென்னையில் பேனர் சரிந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார். பேனர் விபத்து வழக்கில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் கூறினார்.

advertisement by google

?winmeennews.com?ஊடகதளம்
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ அதிக உறுப்பினர்களை சேர்த்துவிட்டோம் என அடுத்தடுத்த நாட்களில் சோர்வாக அமர்ந்துவிடக் கூடாது

advertisement by google

மக்களையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டிய இடத்தில் உள்ள நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்

advertisement by google

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ கோதாவரி ஆற்றில் மூழ்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் 22 பேரை பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்

advertisement by google

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணநிதி வழங்கப்படும்

கோதாவரி ஆற்றில் அனைத்து படகு சேவைகளையும் ரத்து செய்ய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக டெல்லி செல்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

குடியரசுத் தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழிசை சந்திப்பார் எனத் தகவல்
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை ஆஜர் படுத்தக்கோரிய வைகோ மனு மீது நாளை விசாரணை

காஷ்மீர் விவகாரம் தொடர்பான மனுக்களும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ?% வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ?% சிலப்பதிகாரம் , கம்பராமாயணம் முதல் ராஜராஜ சோழன் வரை காவிரி இல்லாமல் வரலாறு இல்லை

?% தமிழகம் முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்துள்ளேன் , இதுவரை எந்த ஆளுநரும் அவ்வாறு சென்றதில்லை

?% விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் நான் அறிந்துள்ளேன்

?% பெட்ரோல் மற்றும் ரசாயனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ?% காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை காணவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்தி

2019 இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: 2019 இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 4.60 லட்சம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்று வரும் காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் பேசினார்
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்live news…..

2000 முறை அத்துமீறிய பாக்.,; இந்திய குற்றச்சாட்டு

இந்த ஆண்டில்(2019) எல்லையில், இதுவரை பாகிஸ்தான் 2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு கூறியுள்ளது.இது தொடர்பாக அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; பயங்கரவாதிகளை, இந்தியாவிற்குள் ஊடுருவ செய்ய, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இந்திய நிலைகள் மீதும், தாக்குதல் நடத்தி வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் அரசிடம் இந்தியாவின் கவலையை தெரிவித்துள்ளோம். இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் 2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 21 பேர் உயிர் இழந்துள்ளனர்.சர்வதேச மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த, 2003ல் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கடைபிடிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் இந்திய ராணுவம், பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுத்து வருவதுடன், பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அமைப்புகளில் எழுப்ப முயற்சித்த பாகிஸ்தானுக்கு தோல்விதான் கிடைத்துள்ளது. எந்த நாடும் அதனை ஆதரிக்க முன் வரவில்லை. இதனையடுத்து, ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பில், காஷ்மீரில், மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டியது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவ செய்ததை விளக்கமாக எடுத்து கூறியது. இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்தி

நாமக்கல்லில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

நாமக்கல்லில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்திருந்த காந்திலால் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள பிள்ளையார் கோவில் அருகே இரண்டு இளைஞர்களை  ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் விவேக் ( 38), சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ( 38) இவர்களை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே இன்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனையடுத்து இரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு கொண்டு வரும் வழியிலே பரிதாபமாக உரியிழர்ந்தனர்
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2:

ஏற்காடு பாரதிய ஜனதா ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை..

ஏற்காடு ஒன்றிய பாஜக துணைத்தலைவர் சின்ராஸ் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய பாஜகதுணைத்தலைவராக இருந்தவர் சின்ராஜ். இவர் இன்றுஅவரது சொந்த ஊரான கொழகூர் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்நேரலை செய்தி ….

மொழி அழியாமல் பாதுகாக்க இரு மொழி கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள்: கவிஞர் வைரமுத்து

நாமக்கல்: தமிழ் சொற்களையும், தமிழ் மொழி என்றும் அழியாமல் பாதுகாக்க இரு மொழி கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள், பாதுகாப்பார்கள் என்று கவிஞா் வைரமுத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழாவில் வைரமுத்து கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹிந்தி மொழி தான் இந்தியாவை இணைக்கும் என்ற ஒரு கருத்து உரைக்கப்பட்டது தமிழருக்கு மட்டும் அல்ல, ஹிந்தி மொழி பேசாத, எந்த மாநிலத்து மக்களுக்கும் உடன்பாடு இருக்காது.
சூரியன் கூட, இந்த ஒட்டு மொத்த பூமிக்கும், ஒரே பகலை கொண்டு வந்து இணைக்க முடியவில்லை.

ஹிந்தி மட்டும் எப்படி இணைக்க முடியும் என்பதுதான் எங்கள் கேள்வி. இருமொழி கொள்கை என்பது தான், அண்ணா இந்த மண்ணுக்கு வகுத்துக் கொடுத்த அழியாத ஜீவக் கொள்கை. அந்த இருமொழி கொள்கைக்கு, தமிழா்கள் தொடா்ந்து உறுதியாக இருப்பார்கள். அரசும் உறுதியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ஸ்ரீலங்கா செய்தி

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு… நாளை ஹர்த்தாலுக்கும் அழைப்பு

கொழும்பு: ஹர்த்தாலுக்கு அழைப்பு… எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நாளைய தினம் கிழக்கிலும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக் குழுவினரால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை மாநாடு ஜெனிவாவில் ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில், தங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதில் சர்வதேசத்திற்கும் பாரிய பங்குள்ளது என்பதினை சர்வதேசத்துக்கு இடித்துரைக்கும் வகையில் தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோசங்களை முன்வைத்து யாழ் மண்ணில் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை ‘எழுக தமிழ்;’ எழுச்சிப் பேரணியினை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கள பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படல் வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடாத்தப்படல் வேண்டும், வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும், இடம் பெயர்ந்து அல்லல்படும் மக்கள் அனைவரும் அவர்களது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பனவே அக்கோசங்களாகும்.

தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு வடக்கு கிழக்கு தழுவியதாக தமிழர் தாயகமெங்கும் எழுக தமிழுக்கான ஆதரவு பல்வேறு தளங்களில் இருந்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் ஆதரவுத்தளத்தினை ஒருங்கிணைத்து எழுக தமிழை பேரெழுச்சியுடன் முன்னெடுக்க ஏதுவாக வடக்கு கிழக்கு தழுவியதான பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

அத்தருணத்திலே ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு கிழக்கு மக்கள் தங்களது முழு ஆதரவினை தெரிவிக்குமுகமாகவும் பேரணியை வலுவூட்டுமுகமாகவும் அன்றைய தினம் கிழக்கு முழுவதிலும் பூரண கதவடைப்பினை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ NEWS?❀•┈┈•

மதிமுகவின் அண்ணா 111.வது பிறந்தநாள் மாநாட்டு விழாவில் வைகோ பேச்சு

நான் பெரியாரின் பேரன்

அண்ணாவின் வார்ப்பு

பல வருடம் கலைஞரிடம் பயிற்சி பெற்றவன்

நான் சாதித்தது போல எவரும் சாதிக்கவில்லை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் யாரும் சாதிக்க முடியது

•┈┈• ❀ ? winmeennews.com?❀ •┈┈•
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக திமுக போராட்டத்தை நாளை அறிவிக்க இருக்கிறது.

அப்போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி பிறந்த நாளான ஜூன்3-ந் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும். அந்த நாளில் திராவிடர் இயக்கப் படைப்பாளிகளுக்கு விருதும் வழங்கப்படும். திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்தேகங்களை தீக்கிரையாக்கியவர்கள்திமுக பல வெற்றி தோல்விகளைப் பார்த்த இயக்கம். திமுகவைப் போல் வெற்றிகளையும் திமுகவைப் போல் தோல்விகளையும் எதிர்கொண்ட கட்சி வேறு எதுவும் இல்லை. தாய்மொழிகாக்க 1965-ல் துப்பாக்கிக் குண்டுகளை நேருக்கு நேர் பார்த்த இயக்கம் திமுக. மொழி காக்க தேக்குமர தேகங்களை தீக்கிரையாக்கியவர்கள் திமுகவினர். இத்தகைய தியாகங்களால்தான் திமுகவுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பை மக்கள் கொடுத்தனர்.முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கைதிமுக அரசின் சாதனை சரித்திரத்தைப் போல் எந்த கட்சிக்காவது உண்டா? தமிழகத்தில் நடைபெறுவது பாஜகவின் பினாமி ஆட்சி, வெளிநாடு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவில்லையே ஏன்? தமிழகத்தில் முதலீடு செய்ய இருக்கும் நிறுவனங்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை? தமிழகத்தில் ஏற்கனவே முதலீடுகளை தொடங்கியதாக சொல்லப்படும் 220 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட தயாரா?மத்திய அரசு முட்டுக் கொடுப்புமத்திய அரசு மட்டும் முட்டுக்கொடுக்காமல் இருந்தால் அதிமுக அரசு நீடித்திருக்குமா? மத்திய அரசின் 100 நாட்களில் பொருளாதாரத்தை 5% ஆக குறைத்ததுதான் மிகப் பெரும் சாதனை. மத்திய அரசின் கலாசார படையெடுப்பை தடுக்க வேண்டிய மாபெரும் இயக்கம் திமுக.அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்புஅமித்ஷாவுக்கும் மோடிக்கும் தாய்மொழி இந்தியே அல்ல…. பிறகு ஏன் இந்தி மொழிக்கு வக்காலத்து? 2 நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது, இந்தி பேசாத மக்களுக்கு தேள்கொட்டியது போன்ற செய்தி.தமிழ் படிக்கவும் தடை வரும்இந்தியாவில் மொத்தம் 1652 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஒரே நாடு ஒரே மொழி என இந்திக்கு மட்டும் மகுடம் சூட்டுவது என்பது இந்தி திணிப்புதான். இன்று இந்தி திணிக்க சட்டம் கொண்டுவருவார்கள்- நாளை தமிழைப் படிக்கவும் தடை சட்டம் கொண்டுவந்தாலும் வருவார்கள்.நாளை போராட்ட அறிவிப்புஅதனால்தான் இந்தி திணிப்பை தந்தை பெரியார் கலாசார படையெடுப்பு என்றார். அத்தகைய கலாசார படையெடுப்பை எதிர்க்கும் போராட்டத்துக்கு திமுக தயாராக இருக்கும். சென்னையில் நாளை திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் ஆலோசித்து அறிவிப்பை வெளியிட இருக்கிறோம்.மீண்டும் 1938 மொழிப்போர்இந்தியை திணிக்கும் எந்த முயற்சியை நாங்கள் பார்த்து கொண்டிருக்கமாட்டோம், இந்தியை திணிக்கும் முயற்சியை தடுக்க எந்த ஒரு தியாகத்துக்கும் திமுக தயாராக இருக்கிறது, இந்தி- இந்தியா இதில் இந்தியாதான் எங்களுக்கு வேண்டும்- இந்தி தேவை இல்லை என்கிறோம். இந்தி திணிப்பு என்பது ஒரு கலாசார படையெடுப்பு. திமுக நடத்தப் போகும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அத்தனை தமிழர்களும் பங்கேற்க வேண்டும். அன்று 1938-ல் தொடங்கிய மொழிப்போரை 2019-லும் நடத்துகிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

இந்தியாவை இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என்று அழைப்பதுதான் ஒரே நாடு ஒரே மொழி என்கிற கோஷத்துக்கு பதிலடியாக இருக்கும் என மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழாவை மதிமுக இன்று நடத்தியது. இத்இல் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்ச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ப்ங்கேற்று உரையாற்றினர்ர்தீர்மானம் 1: இந்திய அரசியல் வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்திருக்கும் திராவிட இயக்கம், தனித்துவமான கொள்கைகள், கோட்பாடுகள், இலட்சியங்களை வகுத்துக்கொண்டு பீடு நடைபோட்டு வருகின்றது. ‘சமூக நீதி’ தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும், தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமைகளைக் காப்பதற்கு அரணாக இருப்பதும், திராவிட இயக்கம்தான் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேருண்மை ஆகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் ஏற்றி வைத்த கொள்கைச் சுடர், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இந்திய நாட்டுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஒளிர்கின்றது. அந்தத் தலைவர்கள் வகுத்த வழியில், தமிழ் இனம் தலைநிமிர உழைத்திட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் காட்டிய இலட்சியப் பயணத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கால் நூற்றாண்டுக் காலமாகப் பயணிக்கின்றது. திராவிட இயக்கத்திற்கு எழுந்துள்ள அறைகூவலை முறியடிக்கவும், தமிழ்-தமிழர்- தமிழ்நாட்டின் உரிமைகளைப் பேணவும், பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி மேற்கொள்கின்றது. தீர்மானம் 2: தமிழ்நாட்டில், ஒடுக்கப்பட்ட பின்தங்கிய, பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட, அவர்களது கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்வதற்காக, 1916 ஆம் ஆண்டு, நவம்பர் 20 ஆம் நாள், தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி உருவாகி, 103 ஆண்டுகள் ஆகின்றன. திராவிட இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில், 2019 நவம்பர் 20 ஆம் நாள் மூன்று சிலைகள் நிறுவிட, இம்மாநாடு தீர்மானிக்கின்றது.தீர்மானம் 3: 2019 ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், மதவாத சக்திகள் வடஇந்தியாவில் பெருவெற்றி ஈட்டியபோதும், தமிழ்நாட்டில் ஆளும் அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கரம் கோர்த்து வந்தபோதும், தமிழக மக்கள் தோல்வியைப் பரிசாக அளித்துப் பாடம் புகட்டி உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, 39 தொகுதிககளில், 38 தொகுதிகளைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்று இருக்கின்றது. ‘தமிழ்நாடு’ பெரியார் மண், திராவிட இயக்க பூமி என்பதை, இந்தியத் துணைக் கண்டத்திற்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்ற வகையில், மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான ஆதரவு வழங்கிய தமிழக மக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கின்றது. தீர்மானம் 4: நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்பட்ட தேர்தல் உடன்பாட்டின்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, மாநிலங்கள் அவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கி, சார்பில் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராகப் பொறுப்பு ஏற்க வழிவகை செய்த தி.மு.க. தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கின்றது. 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராக மீண்டும் பொறுப்பு ஏற்று, திராவிட இயக்கப் போர் முரசம் அறைந்திடுகின்ற கழகப் பொதுச்செயலாளர், திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்களுக்கு, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகின்றது; பேருவகை கொள்கின்றது. தீர்மானம் 5:கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் முதல் உரையை, 2019 ஆகஸ்டு 1 ஆம் நாள் நிகழ்த்தினார். அப்போது, 1962 ஏப்ரல் மாதம் மாநிலங்கள் அவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய கன்னி உரையைச் சுட்டிக் காட்டி உரை ஆற்றினார். “இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்புதான்; ஆனால், ‘இந்தியா ஒரே நாடு’ என்ற கருத்தை பா.ஜ.க. அரசு திணிக்க முற்படுகின்றது; அது இந்திய ஒற்றுமைக்குக் கேடானது; உண்மையில் இந்த நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்று, ‘இந்திய ஐக்கிய நாடுகள் ()’ என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முழங்கினார்கள். இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் சமூக, மொழி, பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்து, தனித் தனித் தேசிய இனங்களின் அடையாளங்களை நிலைநாட்ட இந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ ()’ என்றே அழைக்கப்பட வேண்டும்; அதுதான் ‘ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி’ என்ற இந்து ராஷ்டிர கூப்பாடு போடும் சனாதன சக்திகளின் கோட்பாட்டை முறியடிக்க வல்ல அரசியல் கருவி என, இம்மாநாட்டின் மூலம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பிரகடனம் செய்கின்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் ‘உயில்’ எனக் கருதப்படும் ‘மாநில சுயாட்சி’ கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி, இந்தியாவில் கூட்டு ஆட்சித் தத்துவம் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்திட, இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, இந்துத்தவ சனாதன சக்திகளின் ‘இந்து ராஷ்டிரா’ கருதுகோளை முறியடிக்கத் தேவையான அரசியல் முன்னெடுப்புகளை, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆதரவுடன், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று, இந்த மாநாடு கேட்டுக் கொள்கின்றது. தீர்மானம் 6:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசு அமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் அந்த மாநில மக்களுக்கு சிறப்பு உரிமை வழங்கும் சட்டப் பிரிவு 35ஏ ஆகிய இரண்டையும், பா.ஜ.க. அரசு, 2019 ஆகஸ்டு 5 ஆம் தேதி மாநிலங்கள் அவையிலும், ஆகஸ்டு 6 ஆம் தேதி மக்கள் அவையிலும் சட்ட முன்வடிவுகளைக் கொண்டுவந்து நிறைவேற்றி இரத்து செய்து இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் தொடர்பான சட்ட முன் வரைவுகளை நாடாளுமன்றத்தில் ஆகஸ்டு 5 ஆம் தேதி தாக்கல் செய்த சிறிது நேரத்திலேயே, குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக, குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. நாடாளுமன்றத்திற்கு இதைவிட பெரும் அவமதிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கூறு போடப்பட்டு விட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு – காஷ்மீரும், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதியும் மாற்றப்பட்டு விட்டன. காஷ்மீர் தேசிய இன மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளை, மதவாதக் கண்ணோட்டத்துடன் பாரதிய ஜனதா கட்சி அரசு அணுகி உள்ள முறை, காஷ்மீரை, ‘கொசோவா-கிழக்குத் தைமூர் -தெற்கு சூடான்’ போன்று, இந்தியாவுக்குத் தீராத தலைவலியாக மாற்றிவிடும் ஆபத்தை உருவாக்கி இருக்கின்றது என்று, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாநிலங்கள் அவையில் ஆகஸ்டு 5 ஆம் தேதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா விடுதலை அடைந்த பின்னர், காஷ்மீர் மன்னர் ஹரிசிங், அங்கு பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதா? பாகிஸ்தானுடன் சேர்ப்பதா? என்று முடிவு எடுக்க முடியாமல் தடுமாறினார். காஷ்மீரை இணைத்துக்கொள்ளத் துடித்த பாகிஸ்தான் தனது ராணுவத்தை அனுப்பியது. அவர்களது ஆதரவுடன், பக்டூனிஸ்தான் பழங்குடிகள் காஷ்மீருக்குள் ஊடுருவினர். வேறு வழி இன்றி மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்திய எல்லையில் இருந்து இந்தியப் படைகளும், பாகிஸ்தான் எல்லையில் இருந்துஅந்நாட்டுப் படைகளும் காஷ்மீருக்குள் நுழைந்தன. காஷ்மீரத்தின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது. அதனை ‘சுதந்திர காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர்) என்று பாகிஸ்தானும், ‘ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று இந்தியாவும் கூறி வருகின்றன. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. காஷ்மீரத்தின் மீது இரு நாடுகளும் உரிமை கொண்டாடியபோது, பிரச்சினை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்குச் சென்றது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்புக் கவுன்சில் கூடி, 21.04.1948 இல் தீர்மானம் (எண்.47) நிறைவேற்றியது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு () நடத்தி, காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிந்து, அதன் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று, ஐ.நா. மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால் பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு, ஒப்புக்கொண்டபடி பொதுவாக்கெடுப்பு நடத்தவில்லை. அதற்குப் பதிலாக, காஷ்மீர் மக்களின் தனித்தன்மையை நிலைநாட்ட, அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ பிரிவுகள் உருவாக்கப்பட்டு காஷ்மீரத்துக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டன. அதனை இரத்து செய்யக் கோரி, ஜனசங்கத் தலைவர் டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி, 1953 ஜூன் மாதம் காஷ்மீர் மாநிலம் சென்று போராட்டம் நடத்தினார். தற்போது நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ள பா.ஜ.க., தமது இந்துத்துவ செயல் திட்டத்தின் ஒரு பகுதியான காஷ்மீரத்தின் 370 ஆவது சட்டப் பிரிவை இரத்து செய்து, ஏதேச்சாதிகாரமான முறையில் செயல்பட்டு இருக்கின்றது.காஷ்மீரைத் துண்டாடி விட்டு, கடந்த ஒன்றரை மாதங்களாகக் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு இருப்பதால், அங்கே தீவிரவாதம் மேலும் வலுவடையும். இந்தியாவின் பகை நாடுகள் காஷ்மீர் பிரச்சினையை பன்னாட்டு விவகாரமாக மாற்றுவதற்கு முயன்று வருவதை ஐ.நா. மன்ற நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.எழில் கொஞ்சும் காஷ்மீரை, பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்திற்குத் தாரை வார்க்க மத்திய அரசு முயற்சித்து வருகின்றது. காஷ்மீர் பிரச்சினையில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட ‘வரலாற்றுப் பிழை’யைச் சரிசெய்து, காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.
[9/15, 9:03 PM] விண்மீண்நியூஸ்2: ? BREAKING NEWS ?

?% நவம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதி – அமைச்சர் செங்கோட்டையன்

↹????↹↹ winmeennews.com?%  N҈ e҈ w҈ s҈  ↹↹↹????

advertisement by google

Related Articles

Back to top button