இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

ஒரு பெண்ணுக்காக 9 பேரை கொன்று கிணற்றில் போட்டுள்ள கொடியவன் சஞ்சயின் கூட்டாளிகள் ?தெலுங்கானாவில் அதிர்ச்சி?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

ஒரு பெண்ணுக்காக 9 பேரை கொன்று கிணற்றில் போட்டுள்ளனர் கயவர்கள்..

advertisement by google

தெலுங்கானா கிணற்றில் மிதந்த 9 பேரின் மரணத்தின் மர்மம் தற்போது விலகி உள்ளது.

advertisement by google

இது சம்பந்தமாக 4 பேர் கைதாகி உள்ளனர்.

advertisement by google

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ளது கோரே குந்தா என்ற கிராமம்..

advertisement by google

இங்கு கோணிப்பை தயாரிக்கும் ஃபேக்டரி உள்ளது…

advertisement by google

இதன் ஓனர் சந்தோஷ் என்பவர்..

advertisement by google

இந்த தொழிற்சாலையில் மேற்குவங்கம், பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்துவந்தனர்.

advertisement by google

அவர்களில் ஒருவர்தான் மசூத்.. மேற்குவங்கத்தை சேர்ந்தவர்..

கரிமாபாத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்தார்..

இந்த சமயத்தில் லாக்டவுன் போடவும், ஃபேக்டரி மூடப்பட்டு விட்டது..

அதனால் குடியிருந்த வீட்டுக்கு வாடகை தர முடியாமல் போய்விட்டது..

அதனால் ஓனர் சந்தோஷ் அந்த குடும்பத்தை தன்னுடைய குடோனிலேயே தங்க வைத்து கொண்டார்.

இந்த சமயத்தில்தான் அந்த குடும்பத்தையே திடீரென காணவில்லை என்று போலீசில் புகார் தந்தார் சந்தோஷ்!

போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்..

அப்போதுதான், பேக்டரி பக்கத்திலேயே ஒரு கிணற்றில் சடலங்கள் மிதப்பதாக தகவல் வரவும் அங்கு சென்றனர்..

தண்ணீரில் மிதந்தபடி 4 சடலங்களை கிடந்தன.. மசூத், அவரது மனைவி நிஷா, கணவரை பிரிந்து வாழ்ந்த அவரது மகள் புஸ்ரா, அவரது 3 வயது மகன் ஆகியோர் சடலங்கள்தான் அவை!!

கொரோனா லாக்டவுன்: சாலை விபத்துகளில் மட்டும் 196 இடம்பெயர் தொழிலாளர்கள் மரணம்

*ஆனால் சடலங்களை மீட்ட மறுநாளே அதாவது கடந்த வெள்ளிக்கிழமை அதே கிணற்றில் மேலும் 5 சடலங்கள் மிதப்பதாக தகவல் வரவும் மீண்டும் சென்று மீட்பு பணியை தொடங்கினர்..

அப்போது மசூத் மகன் சபாக், பீகாரை சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம், ஷாம், திரிபுராவை சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் உடல்களை கைப்பற்றினர்.

இப்படி ஒரே கிணற்றில் அடுத்தடுத்து 9 சடலங்கள் மிதந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து..

இவர்கள் எதனால் இறந்தார்கள்? வறுமையால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலையா என்ற பரபப்பு விசாரணையும் ஆரம்பமானது.

ஆனால் சடலங்களை மீட்ட உடனேயே அது தற்கொலை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் போலீசார்..

காரணம் அந்த பாழுங்கிணற்றில் மூழ்கி சாகும் அளவுக்கு தண்ணீர் இல்லை என்பதால்!!

அதனால் கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமானது..

இவர்கள் சடலமாக மிதந்த முதல்நாள்தான், மசூத்தின் மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது தெரியவந்தது.. இந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சஞ்சய் குமார் ஷா என்ற பீகாரை சேர்ந்தவரும் வந்திருக்கிறார்…

ஆனால் சடலங்கள் மிதந்த அன்று அவரை அந்த ஊரில் காணோம். எனவே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. இறுதியில் அவரை கைதும் செய்தனர்.. அப்போதுதான் சஞ்சய் குமார் ஷா உட்பட 4 பேர் சேர்ந்து இந்த 9 பேரையும் கொன்றது தெரியவந்தது.

காரணம் மசூத் மகள் புஸ்ராதான்.. கணவனை பிரிந்து வாழும் இந்த பெண்ணுக்கு வயது 22 ஆகிறது.. புஸ்ராவுக்கும் சஞ்சய்-க்கும் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது.. ஆனால் மசூத் மகளை கண்டிக்கவும், சஞ்சய்யுடனான தொடர்பை புஸ்ரா கைவிட்டுவிட்டார்.. இந்த கோபத்தினால்தான் மசூத் குடும்பத்தையே மொத்தமாக காலி செய்ய சஞ்சய் துடித்தார். அதற்காக நண்பர்கள் 4 பேரை தயார் செய்தார்.. பக்காவாக பிளான் செய்தார். அந்த சமயத்தில்தான் புஸ்ரா மகனுக்கு பர்த்டே வந்தது.. பிறந்த நாள் நிகழ்ச்சியில், குழந்தைக்கு வாழ்த்து சொல்ல வந்தவர்கள், சர்க்கரை பொங்கல் சமைத்து சாப்பிட்டுள்ளனர். அங்கிருந்த கூல்டிரிங்ஸ்-ல் விஷத்தை கலந்து 9 பேருக்கும் தந்தனர்.. குடும்பமே அந்த விஷ ஜூஸை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளது..

இதன்பிறகுதான் அவர்களை தூக்கி கொண்டு போய் பக்கத்தில் உள்ள பாழுங்கிணற்றில் ராத்திரியோடு ராத்திரியாக தூக்கி போட்டு வந்துள்ளனர்.

இப்போது 4 பேருமே தற்போது கைதாகி உள்ளனர்.. பீகாரை சேர்நத் ராம் குமார், ஷியாம் குமார் ஆகியோர் மசூத்துடன் நெருக்கமாக இருப்பது சஞ்சய்க்கு பிடிக்காததால், அவர்களையும் சேர்த்து கொன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது… ஏற்கனவே எத்தனையோ இன்னல்களில் பசியும், பட்டினியுமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தவித்து வரும் நிலையில், இப்படி ஒரே குடும்பத்தில் அப்பாவி குடும்பம் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button