இந்தியாஇன்றைய சிந்தனைதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்விளையாட்டு

கொரோனா டிஸ்சார்ஜ் விதிகளை திடீரென மாற்றிய தமிழக அரசு? இனிமேல் இதுதான் வழி? சுகாதாரத்துறை அதிரடி? முழுவிவரம்-விண்மீன் நியூஸ்

advertisement by google

கொரோனா டிஸ்சார்ஜ் விதிகளை திடீரென மாற்றிய தமிழக அரசு.. இனிமேல் இதுதான் வழி.. சுகாதாரத்துறை அதிரடி!

advertisement by google

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்க் செய்வதற்கான விதிமுறைகளை தமிழக அரசு மாற்றி புதிய வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

advertisement by google

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையில் இன்று மட்டும் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 489 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதுவரை 4,895 பேர் குணமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்க் செய்வதற்கான விதிமுறைகளை தமிழக அரசு மாற்றி புதிய வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் அறிகுறி இல்லாமல் அல்லது மிக குறைவான அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகள் 10 நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். இவர்களுக்கு 10 நாட்கள் கழித்து தொடர்ச்சியாக மூன்று நாட்களாக காய்ச்சல் இல்லை என்றால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யபபடலாம்.

advertisement by google

சிகிச்சை எங்கே
இவர்கள் கொரோனா டெஸ்டில் பாசிட்டிவ் என்று வந்ததில் இருந்து இந்த கணக்கு மேற்கொள்ளப்படும்.பொதுவாக அறிகுறி இல்லாத நபர்கள் தமிழகத்தில் வீட்டில் வைத்து சிகிச்சை பெறுகிறார்கள். சிலர் கொரோனா தடுப்பு மையத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். சிலர் மருத்துமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் சிகிச்சை பெற தொடங்கிய நாளில் இருந்து 10 நாட்கள் கழித்து, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.

advertisement by google

மிக முக்கியம்
அதேபோல் இவர்களுக்கு மூச்சு தொடர்பான பிரச்சனை இருக்க கூடாது. சுவாசிப்பதில் சிக்கல் இருக்க கூடாது. அப்போது மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறி தொடர்ச்சியாக இருந்து, ஒருவேளை ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்பட்டால் அவர்களை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது. அவர்களுக்கு அறிகுறி சரியாகி, ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படாமல் போனால் மட்டும் டிஸ்சார்ஜ் செய்யமுடியும்.

advertisement by google

அவசியம் இல்லை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த இரண்டு வகைகளில் குணமாகும் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யும் முன் உறுதிப்படுத்த கொரோனா சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இறுதியாக செய்யப்படும் கொரோனா சோதனை இல்லாமலே இவர்களை டிஸ்சார்ஜ் செய்ய முடியும். ஆனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின் இவர்கள் 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். இதற்கு முன் நோயாளிகளை கடைசியாக இரண்டு முறை கொரோனா சோதனை செய்வார்கள்.

advertisement by google

தனிமை உக்கிரம்
இரண்டு முறையும் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்வார்கள். ஆனால் தற்போது அந்த சோதனை முறைகள் கைவிடப்பட்டு, சோதனை இல்லாமலே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டள்ளது. அதேபோல் ஒரு கட்டுப்பாட்டு பகுதிகளில் 14 நாட்களாக தொடர்ச்சியாக புதிய கேஸ்கள் இல்லை என்றால் அந்த இடம் கட்டுப்பாட்டு பகுதி பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

advertisement by google

கட்டுப்பாட்டு பகுதி எப்படி செயல்படும்
கிராமங்களில் அடுத்தடுத்த ஐந்து வீடுகளில் கொரோனா கேஸ்கள் ஏற்பட்டால் மொத்த கிராமமும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படலாம். ஆனால் கார்ப்பரேஷன் பகுதிகளில் ஒரு தெருவில் அடுத்தடுத்து கேஸ்கள் ஏற்பட்டால், அந்த தெரு மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்த கொரோனா அறிகுறி உள்ள எல்லோரும் சோதனை செய்யப்படுவார்கள். 14 நாட்களுக்கு முன் வந்த எல்லோரும் சோதனை செய்யப்படுவார்கள்.

காண்டாக்ட் சோதனை எப்படி
அறிகுறி இல்லாத, ஆனால் கொரோனா நோயாளிகளுடன் தொடர்ந்து கொண்ட பிரைமரி காண்டாக்ட்கள் சோதனை செய்யப்டுவார்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வரும் எல்லோரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். தமிழகத்திற்கு உள்ளேயே மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யும் நபருக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். இல்லையென்றால் சோதனை செய்யப்படாது, என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button