இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

மதியநேர பரபரப்பான விரிவான செய்திகள்(14.9.2019)

advertisement by google

விண்மீண்நியூஸ்நேரலை செய்தி

advertisement by google

?பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்ய 7 மணிக்கே போகணும்!’ – ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியின் அவலம்

advertisement by google

?புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தான்மனையில் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. குறிப்பாக, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இந்தப் பள்ளியில் இல்லை. இதுபற்றி, மாணவர்களின் பெற்றோர் பலமுறை ஆசிரியர்களிடமும் கல்வித்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும் எந்தப் பலனும் இல்லை.

advertisement by google

?மாணவர்களுடன் மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்
இந்தநிலையில் தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களின் பெற்றோர் மாணவர்களோடு சேர்ந்து சாலை மறியில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

advertisement by google

?அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால், கலைந்து சென்றனர். தற்போது, உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

?இதுபற்றி மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது,”ஆதிதிராவிடர் நலப் பள்ளி என்பதால், அனைத்து தரப்பினருமே அலட்சியம் காட்டுகின்றனர். இங்குக் குடிநீர் சரியாக வருவதில்லை. ஆசிரியர்களுக்கான கழிப்பறை தவிர மற்றவை செயல்பாட்டில் இல்லை. மாணவர்களுக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. போதாக்குறைக்கு ஆசிரியர் பற்றாக்குறை வேறு. பிள்ளைகள் ஒரு சில நாள்கள் சீக்கிரமாக எழுந்து 7 மணிக்கெல்லாம் பள்ளிக்கு கிளம்பிடுவாங்க.

advertisement by google

?மண்டபத்தில் அடைக்கப்பட்ட மாணவர்கள்
என்னவென்று கேட்டால், பள்ளிக்கூடத்தைச் சுத்தம் செய்யணும், அதுக்காகப் பள்ளியில் குழு பிரிச்சு விட்டுருக்காங்க என்று சொல்லிவிட்டு கிளம்புவாங்க. பள்ளிக்குப் போய் என்ன ஏதுன்னு விசாரித்தால், அந்த நேரத்திற்குப் போய் பள்ளியை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யுறாங்க.

advertisement by google

?பள்ளிக்கூடத்தைச் சுத்தம் செய்வது தப்பு இல்லை. ஆனால், அதற்காக உள்ள பணியாளர்களை வைத்துச் சுத்தப்படுத்தலாம்.
ஆனால், பச்சைப் பிள்ளைகளை சீக்கிரமாக வரவழைத்து தினம் தினம் சித்ரவதைப்படுத்துறாங்க. இதையெல்லாம், பார்த்துவிட்டு பொறுக்க முடியாமல்தான் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினோம். காவல்துறையினர் எங்களுடன் பச்சைப்பிள்ளைகளையும் சேர்த்து மண்டபத்தில் அடச்சிவச்சி அப்புறம் வெளியில விட்டாங்க. அந்தப் பள்ளிக்காக பல வருஷமாகப் போராடிக்கிட்டுதான் இருக்கோம்.

?ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி
ஆனாலும், எதையும் நிறைவேற்றலை. தொடர்ந்து, போராடினால்தான் அனைத்தும் நடக்கும் என்றால், தொடர்ந்து போராடுவோம்” என்றனர்.

?இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,“தற்போது தற்காலிக ஆசிரியர் பணிக்குச் செல்வார். விரைவில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார். தொடர்ந்து, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும்” என்றனர்.
[9/14, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: ?

இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டதாக பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்க மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த மாதம் 30ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், தொடர் சரிவில் உள்ள வாகன தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சலுகைகளை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணியளவில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ள நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
[9/14, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்தி ….

?இயற்கை பாதுகாப்பு புகைப்பட போட்டியில் வெற்றிப்பெற்ற படங்கள் தொகுப்பு வெளியீடு

?வெற்றிப்பெற்ற புகைப்படங்களின் தொகுப்பு… இயற்கை பாதுகாப்பு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்ற புகைப்படங்களின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

?152 நாடுகளில் இருந்து வன உயிர், நீர், இயற்கையோடு மனிதர்கள், சமவெளி, நகரம் மற்றும் இயற்கை ஆகிய தலைப்புகளின் கீழ் புகைப்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 774 புகைப்படங்கள் போட்டிக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

?அவற்றில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டைலர் ஸ்கிஃப்மேன் என்ற புகைப்படக் கலைஞர் கடலுக்கு அடியில் கடல்சிங்கம் நீந்தி வரும் காட்சியை அழகிய ஒளி ஓவியமாகப் படம் பிடித்தார்.

?இதற்காக அவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. பிற புகைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. அவற்றின் தொகுப்பு வெளியாகியுள்ளது.
[9/14, 1:47 PM] விண்மீண்நியூஸ்2: ?

தமிழகத்தில் இன்று லோக் அதாலத் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 660 வழக்குகள் விசாரணை.!

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில் இந்த ஆண்டு மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லோக் ஆதாலத் நடத்த தேசிய லோக் அதாலத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழத்தில் இன்று நடைபெறும் லோக் அதாலத்களில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யத்தக்க காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 978 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

மேலும் நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பான காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் தகராறு வழக்குகள், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 62 ஆயிரத்து 682 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 அமர்வுகளும், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் 8 அமர்வுகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 6 அமர்வுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தமிழகம் முழுதும் கீழமை நீதிமன்றங்களில் 489 அமர்வுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
[9/14, 2:11 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்தி

?அமெரிக்க வாழ் தமிழரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

?சென்னை மாம்பலத்தில் அமெரிக்க வாழ் தமிழரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் பணிபுரியும் கிருஷ்ணனை கடத்தி வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக மணிகண்டன்,ஜெயந்திநாதன், பட்டாபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[9/14, 2:11 PM] விண்மீண்நியூஸ்2: ?இராணுவ செய்தி

?கடற்படைக்கான தேஜஸ் விமானம் சோதனை வெற்றி

?கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, தேஜஸ் போர் விமானத்தை தரை இறக்கும் சோதனை, நேற்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. எச்.ஏ.எல்., எனப்படும், ‘ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்’ நிறுவனத்துடன் இணைந்து, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், தேஜஸ் ரக போர் விமானங்களை முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.இந்த தேஜஸ் ரகத்தை சேர்ந்த, 40 போர் விமானங்களை வாங்க, எச்.ஏ.எல்., நிறுவனத்திடம், இந்திய விமானப் படை, ஏற்கனவே கோரிக்கை வைத்தது. இந்நிலையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 83 தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய, கடந்த ஆண்டு, கோரிக்கை வைத்தது.இதையடுத்து, கடற்படைக்கு என, பிரத்யேகமான தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்கும் பணியில், எச்.ஏ.எல்., ஈடுபட்டுள்ளது.

?இதன் பணிகள், முடிவடைந்த நிலையில், இதை தரை இறக்கும் சோதனை, மஹாராஷ்டிரா மாநிலம், கோவாவில் உள்ள, கடற்பகுதியில், நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
[9/14, 2:11 PM] விண்மீண்நியூஸ்2: ?நேரலை செய்தி …

?இந்தோனேஷியா வனப்பதியில் தீ… கரும்புகையால் விமான போக்குவரத்து பாதிப்பு

?இந்தோனேஷியா: வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் விமான போக்குவரத்து பாதிப்பு… இந்தோனேஷியா வனப்பகுதிகளில் தீப்பற்றி, வானில் கரும்புகை படர்ந்து வருவதால், அந்நாட்டில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

?இந்தோனேஷியாவில், விவசாயிகள் தங்களது நிலங்களை விவசாயத்துக்கு தயார்படுத்தும் நோக்கில், நிலத்திலிருந்த கழிவுகளை தீ வைத்து எரித்தனர்.

?இதில் காற்றின் வேகம் காரணமாக தீ அருகிலிருந்த வனப்பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில்,
சுமார் 30 எஸ்டேட்கள் மூடப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

?கரும்புகை மூட்டத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பக்கத்து நாடான மலேசியா, மக்களுக்கு முகமூடிகளை வழங்கி வருகிறது. மேலும், நச்சுப்புகை வெளியேறுவதை தடுக்கும்படியும் அந்நாட்டு பிரதமர் மஹாதீர் முகமது, இந்தோனேஷியாவை வலியுறுத்தி வருகிறார்.

?இருப்பினும் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் இந்தோனேஷியா, மலேசியா எல்லைகளில் தீப்பற்றி எரிவதால் தான் இந்த பிரச்சனை என்றும், இந்தோனிஷேயாவில் செயல்படும் மலேசியா நிறுவனங்கள் தான் இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளது.

?இந்தநிலையில், வானில் கரும்புகை படர்ந்திருப்பதால், விமானங்களை இயக்க போதிய வெளிச்சம் இல்லை என கூறி ரியாவ் மற்றும் மத்திய கலிமந்தன் மாகாணங்களில் உள்ள இரு விமான நிலையங்கள், சில விமானங்களின் சேவையை நிறுத்தியுள்ளது.

?மேலும் சில விமானங்களை தாமதமாக இயக்கி வருகிறது. இதனால் கடும் அவதிக்குள்ளாகும் பயணிகள் விமான நிலையங்களில் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
[9/14, 2:11 PM] விண்மீண்நியூஸ்2: ?PM News …..

?பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

?அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்… மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் வரும் அக்டோபர் மாதம் சந்தித்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

?அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வின் போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு அக்டோபர் 11ந்தேதி முதல் 13ந்தேதி வரை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

?இதனால் தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு வசதி மற்றும் அங்குள்ள இடங்களை உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

?இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் இடையேயான சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படும் மாமல்லபுரத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

?இதில் வெளியுறவு துறை அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

?இன்னும் சில தினங்களில் சீனாவில் இருந்து அங்குள்ள அதிபரின் பாதுகாப்பு படையினர் மாமல்லபுரத்திற்கு வந்து ஆய்வு நடத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
[9/14, 2:11 PM] விண்மீண்நியூஸ்2: ?நேரலை செய்தி

?ஜம்மு – காஷ்மீரில் நிலம்; தங்கும் விடுதிகள்!’ – கர்நாடக அரசின் புதிய திட்டம்

?வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

?விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது அப்போதைய மன்னர் ராஜா ஹரி சிங் வேண்டுக்கோளுக்கு இணங்க அரசியல் சாசனப் பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் அம்மாநில மக்கள் சில சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

?காஷ்மீர் மக்களைத் தவிர நாட்டின் பிற மாநிலத்தவர் அங்கு சொத்துகள் வாங்க முடியாது

?மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே மாநிலத்தில் செல்லுபடியாகும். ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் யார் வேண்டுமானாலும் அங்கு நிலம் வாங்கலாம் என நிலை உருவானது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டரா அரசு ஜம்மு – காஷ்மீரில் நிலம் வாங்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

?இந்தநிலையில் தற்போது கர்நாடக அரசு ஜம்முவில் நிலம் வாங்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ரவி, “ஜம்மு – காஷ்மீரில் நிலம் வாங்குவது தொடர்பாக அமைச்சரைவில் முன்மொழிவை வைக்க இருக்கிறோம்.

?சட்டமன்றத்தில் அனுமதி கிடைத்ததும் மத்திய அரசு மற்றும் ஜம்மு – காஷ்மீர் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துவோம். ஒப்புதல் கிடைத்ததும் இரு யூனியன் பிரதேசங்களிலும் முதலீடு செய்வோம். சுற்றுலா விடுதிகள் அங்கு கட்டப்படும். இந்த முதலீட்டை கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் ஒப்படைக்கவுள்ளோம்” என்றார்.

?ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்ய மற்ற மாநிலங்கள் ஆர்வம்காட்டாத நிலையில் பாஜக அரசு ஆட்சி புரியும் இரண்டு மாநில அரசுகள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளன. கர்நாடகத்தில் சமீபத்தில்தான் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின்னர், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது
[9/14, 2:11 PM] விண்மீண்நியூஸ்2: ?மேட்டூர் செய்தி …

?மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

?டெல்டா பாசனத்திற்கான நீர்வரத்து குறைவால் மேட்டூர் அணையிலிருந்து 16 கண்மதகில் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பாசனத்திற்காக அணை மற்றும் சுரங்க மின் வழியாக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆக இருக்கிறது.
[9/14, 2:11 PM] விண்மீண்நியூஸ்2: ?

திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தர்மா கைது.!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கோஷமிட்டதால் தர்மா கைது இதையடுத்து பேகம்பூர் பகுதியில் பதட்டத்தை தணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
[9/14, 2:11 PM] விண்மீண்நியூஸ்2: ??தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
நடப்பு ஆண்டு முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு (Public exam) நடத்தப்படும் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

advertisement by google

Related Articles

Back to top button