கிரைம்பயனுள்ள தகவல்

புதியபார்வைமனித மனம் நம் உடலெனும் பூட்டை இயக்கும் ஓர் அற்புத சாவி

advertisement by google

புதிய பார்வை.

advertisement by google

மார்ச் 10,
1981ம் ஆண்டு.

advertisement by google

‘மாரிஸ் குட்மேன்’ என்ற அமெரிக்கருக்கு கடுமையான விபத்து நடந்தது.

advertisement by google

அவர் இன்சூரன்ஸ் பாலிஸிகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வெற்றிகரமாக
செய்து வந்தார்.

advertisement by google

தனக்கான ஒரு குட்டி ஏரோப்ளேன் வாங்கி
அதை அவர் ஓட்டிக் கொண்டு
சென்றார்.

advertisement by google

ஆனால் விமானத்தின் எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டு அவர் அவசரமாக அதை தரையிறக்க முயற்சித்த போது ‘க்ராஷ்’ ஆகி விழுந்ததில் அவருக்கு பலத்த அடிபட்டது.

advertisement by google

அவரது கழுத்து எலும்புகள், மிக முக்கியமான முதுகுத்தண்டு எலும்புகள், மற்றும் மார்பு எலும்புகள் உடைந்தன.

advertisement by google

நுரையீரல், உதரவிதானம் என்று ஏகப்பட்ட இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ‘அவரால் நடக்க முடியாது, பேச முடியாது, சாப்பிட முடியாது, மூச்சுவிட முடியாது (செயற்கை சுவாசம் தான்), உடலை அசைக்கக் கூட முடியாது’…

இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போனார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் ‘அவர் உயிரோடு இருந்தாலும் ஒரு நடைபிணம் போலத்தான் இருப்பார்.

அவரால் ஒரேயொரு வேலையை மட்டும் தான் செய்ய முடியும்.

கண்களை மட்டும் அவரால் இமைக்க முடியும்.

இனி வாழ்நாள் பூராவும் இப்படித்தான் இருக்க முடியும்.

அதிகபட்சம் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் தான் இருப்பார்’ என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

ஆனால் மருத்துவர்கள் கொடுத்த அச்சங்களை எல்லாம் மீறி …

‘தான் பேசவேண்டும், இயற்கையாக மூச்சு விட வேண்டும், யாருடைய உதவியும் இன்றி நடக்க வேண்டும், இதெல்லாம் அடுத்த கிறிஸ்துமஸுக்குள் நிறைவேற வேண்டும்’ என்று மோரிஸ் மனதுக்குள் முடிவு செய்து கொண்டார்.

அற்புதம்,
ஆனால்
உண்மை.

அவர் நினைத்தபடியே தான் நடந்தது.

அதே ஆண்டு, நவம்பர் மாதம் 13ம் தேதி அவர் மருத்துவமனையை விட்டு
உலக வாழ்க்கைக்கு வந்தார்.

எட்டே மாதங்கள்!

அவருடைய ‘மனமே’ அவர் ‘உடலை’ குணப்படுத்தியிருந்தது.

ஆனால் எவ்வளவு உறுதியாக அவர், தன் மனதை வைத்திருந்தால், அந்த அற்புதம் நடந்திருக்கும் என்று நாம் நிச்சயம் கற்பனை செய்ய முடியும்.

உலகம் அவரை,
‘அற்புத மனிதர் குட்மேன்’
என்று அழைத்தது.

அவரைப் பற்றி
டாக்குமெண்டரிகளும், குறும்படங்களும் எடுக்கப்பட்டன.

அவரே தன் வாழ்க்கை வரலாற்றை நூலாகவும் எழுதியுள்ளார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன???

‘மனித மனம்’
என்பது…

‘நம் உடலெனும்
பூட்டை இயக்கும்
ஒரு அற்புத சாவி’
என்பதே.

advertisement by google

Related Articles

Back to top button