இந்தியாஉலக செய்திகள்கிரைம்சிரிக்க சிந்திக்கதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

பூனைகறியை மான்கறியென ஆசை ஆசையாக சாப்பிட்ட மக்கள்?மொத்த பேரையும் அலறவிட்ட ஆம்பூர்இளைஞர் ? தட்டி தூக்கிய போலீஸ்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

மான்கறியா.. ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. மொத்த பேரையும் அலற விட்ட ஆம்பூர் இளைஞர்.. தட்டி தூக்கிய போலீஸ்.

advertisement by google

ஆம்பூர்: ஊரடங்கு சமயத்தில் மான் கறி என்று நினைத்து ஆசை ஆசையாக சாப்பிட்ட மக்கள் அத்தனை பேரும் ஏமாந்து விட்டனர்.. சாப்பாட்டு விஷயத்தில் ஏமாற்றி மக்களுக்கு கிலியை ஏற்படுத்திய அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

advertisement by google

ஆம்பூர் பகுதிகளில் சில நாட்களாகவே நாடோடி இனத்தை சேர்ந்த சிலர் திருட்டுத்தனமாக மான் கறி விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.. ஒரு கிலோ மான்கறி 500 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
மேலும் பொதுமக்கள் ஏராளமானோர் மான்கறியை விரும்புவதால், வியாபாரம் சக்கை போடு போடுவதாகவும் புகார் வரவும் போலீசார் அதிரடியாக களமிறங்கினர். கேள்விப்பட்டதைவிட பொதுமக்களில் நிறைய பேர் மான்கறியை ரசித்து சாப்பிட்டுள்ளதும் தெரியவந்தது. அதனால் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்… தனிப்படை வைத்து கண்காணிக்கப்பட்டதில் மணிகண்டன் என்ற இளைஞரின் பெயர் அடிபட்டது.

advertisement by google

அதனால் அவர் வீட்டை தேடி கொண்டு போலீசார் சென்றனர்.. அப்போது மணிகண்டன் ஒரு பூனையை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்திருக்கிறார்.. இதை பார்த்து அதிர்ந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், இவ்வளவு நாளாக விற்று கொண்டிருந்தது மான்கறி இல்லை, பூனைக்கறிதான் என்றார். இவர் பெயர் மணிகண்டன், சோலூர் அருகே உள்ள நமாஸ்மேடு நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர். 25 வயதாகிறது.

advertisement by google

மான் வேட்டைக்கு போகிறேன் என்று சொல்லி பூனையை வேட்டையாடி அந்த இறைச்சியை தந்துள்ளார்.. மக்களும் அது தெரியாமல் மான்கறி என்று நம்பி சாப்பிட்டுள்ளனர். மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.. இவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் தேடி வருகிறார்கள்.
வனவிலங்குகளின் இறைச்சியை வாங்கி சாப்பிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்… தினமும் இந்த அளவுக்கு எப்படி மான்கறி எளிதாக கிடைக்கும் என்றுகூட யோசிக்காமல் மக்கள் பூனைக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது!!

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button