இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்சிரிக்க சிந்திக்கதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

ஜோதிகா சொன்னதுக்கு இவ்ளோ கோவம் வருதே, உங்களுக்கு கொரோனா வந்தால் முதல்ல கோயிலுக்கு போவீங்கலா?ஆஸ்பத்திரி போவீங்களா ?சீமான் காட்டமான அதிரடி கேள்வி?முழு விவர தொகுப்பு – விண்மீன்நியூஸ்

advertisement by google

ஜோதிகா சொன்னதுக்கு இவ்ளோ கோவம் வருதே..

advertisement by google

உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி..

advertisement by google

இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..

advertisement by google

உங்களுக்கு ஒருவேளை கொரோனா வந்தால், நீங்க முதல்ல கோயிலுக்கு போவீங்களா?

advertisement by google

ஆஸ்பத்திரிக்கு போவீங்களா?

advertisement by google

இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க”

advertisement by google

என்று சீமான் காட்டமான கேள்விகளை அடுக்கடுக்க கேட்ட ஒரு அறிக்கையை விடுத்துள்ளார்.

advertisement by google

சமீபத்தில் கோயில் சர்ச்சை விவகாரத்தில் ஜோதிகா சிக்கியிருந்தார்..

அது சர்ச்சையாக்கப்பட்டது.. திரித்து கூறப்பட்டது.. விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன… தடித்த வார்த்தைகள் வெளிப்பட்டன.. ஆனால் இவை எல்லாம் ஒரு தரப்பில் இருந்தே வெளியாகின.

பெரும்பாலானோர் ஜோதிகா பக்கமே நின்றனர்.. ஜோதிகா அப்படி என்ன தப்பா கேட்டுவிட்டார் என்று எதிர்கேள்விகள் எழுப்பப்பட்டன. இப்போது ஜோதிகா பேசியதற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ஏகப்பட்ட விஷயங்களை முன்வைத்து நறுக் நறுக்கென கேள்வியை எழுப்பி உள்ளார்.

அந்த அறிக்கை இதுதான்:

கோயில்களைப் போன்றே மருத்துவமனைகளையும், கல்வி நிலையங்களையும் பராமரிக்க வேண்டும் என்று விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையாக மாறியது.

அவர் இந்து மக்களையும், கோயில்களையும் அவமதித்ததாகக் கூறி கடுமையான விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் ஜோதிகாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,”ஊரடங்கால் 45 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பசி, பட்டினியோடு உறங்கும்போது வராத கோபம், பேரிடர் காலத்திலும் மத்தியில் அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்கள் பாதுகாப்புச் சாதனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்குக்கூடத் தடைவிதிக்கிறபோது வராத கோபம். மாநிலங்களிடமிருந்து வரி வருவாயைப் பெற்றுக்கொண்டு அதனைப் பேரிடர் காலத்திலும் திருப்பித் தர மறுக்கும்போது வராத கோபம். ஊரடங்கால் தாய்நிலம் திரும்ப முடியாததால் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் கால் கடுக்க நடந்தே சென்று உழைக்கும் மக்கள் உயிரைவிடும்போது வராத கோபம். தெலுங்கானாவில் ஒரு குடும்பத்தினரும், உபியில் 5 குழந்தைகளும் அவர்களது தாயும் ஊரடங்கை எதிர்கொள்ள முடியாது உணவுக்கு வழியின்றித் தற்கொலை செய்து மாண்டபோது வராத கோபம்.அடுப்பில் நெருப்பேற்ற வழியில்லாது அடித்தட்டு மக்கள் அல்லல்படும்போது விளக்கில் நெருப்பேற்றி வாசலில் வைக்கச் சொன்னபோது வராத கோபம். கையுறையும், பாதுகாப்புச் சாதனங்களும் சரிவரக் கிடைக்காதபோது மருத்துவர்களுக்காகக் கைதட்டுங்கள் எனக் கூறி கொண்டாட்ட மனநிலையை மக்களிடையே உருவாக்க முயன்றபோது வராத கோபம்.நாட்டின் பொருளாதாரத்தை அதாளபாதாளத்திற்குத் தள்ளிவிட்டு தனிப்பெரு முதலாளிகளுக்கு 68,000 கோடியைத் தாரைவார்த்தபோது வராத கோபம். நாட்டு மக்கள் பேரிடரில் சிக்கித் தவிக்கும்போதும் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி மதத் துவேசத்தை ஏற்படுத்த முயன்றபோது வராத கோபம். அத்தியாவசிய பொருட்களைச் சுமந்து செல்லும் வாகனங்களுக்கும் இந்த நேரத்திலும் சுங்கவரி உயர்த்தி மக்களின் தலையில் சுமையேற்றியபோது வராத கோபம். பல வருடம் போராடி பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை எந்தவித முன் அறிவிப்புமின்றி அதன் தன்னாட்சியைப் பறித்து மத்திய அமைச்சரவைக்குக்கீழ் கொண்டு வந்த பொழுது வராத கோபம். நாம் கோயில்களுக்குச் செலவு செய்வதைப் போல கல்விக்கும், மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யலாம் என ஜோதிகா சூர்யா கூறியதற்கு வருகிறதா? ஐயா நியாயமார்களே.. நல்லோர்களே…உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.. இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்…உங்களுக்கு வரக்கூடாது என்பது என் விருப்பம்..ஆனால் ஒருவேளை கொரோனா உங்களைத் தாக்கினால் நீங்கள் முதலில் கோயிலுக்குச் செல்வீர்களா? மருத்துவமனைக்குச் செல்வீர்களா?இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்..உலகமெல்லாம் எல்லா வழிபாட்டுத்தலங்களும் மூடியிருக்கும் பொழுது மருத்துவமனைகளின் கதவுகள் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோயிலுக்குள் நீட்டப்படும் தட்டில் விழும் பணம் காணிக்கையென்றும், கோயில் வெளியே நீட்டப்படும் தட்டில் விழும் பணம் பிச்சையென்றும் பார்க்கும் பார்வையை மாற்றுங்கள்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

advertisement by google

Related Articles

Back to top button